அர்த்தங்கள் தேடுகிறேன்,

அர்த்தங்கள் தேடுகிறேன்,
உன் தீண்டலின் சிலிர்ப்புக்கு ...
மௌனமாய் சிரிக்கும்
உன் கண்களில்
என் வெட்கம்
தொலைய தொடங்குகிறது...
உன் மெய் தீண்டலில் ...

கண்களை கண்கண்டு பாராமல்
முகத்தை திருப்பி ,
உள்ளுக்குள் ஓராயிரம் முறை
தடுமாறி தவித்து , மீண்டும்
உன்னுள் தொலைகிறது
என் இதயம் ...
கன நேர தீண்டலில்
கண் மூடி திறப்பதற்குள்
கவிந்து விடுகிறது ,
என் பெண்மை...
என் நாணத்தை மறந்து
உன்னுள் தொலைய....

ஒரு சிறு பரிசம்,
என்னை.........
எத்தனை முறை
தத்தளிக்க வைத்து
கொன்று வெல்கிறது
உன் தீண்டலில் ...
ஒவ்வொரு தீண்டலிலும்
என்னை இழந்து
மீண்டும் மீண்டும்
உயிர் கொள்ள செய்கிறது ...
என் காதல் ....

எழுதியவர் : சுபா பிரபு (11-Sep-17, 12:13 pm)
பார்வை : 162

மேலே