பெண்ணும் நிலவும்

பகலில் ஒளி இழந்த
பூரண நிலவைப்போல்
உன் முகம் ஏனடி
இப்படி களை இழந்து
போனதடி என்று நான்
அவளை,என்னவளைக் கேட்டேன்

அவள் சொன்னால் அதற்கு,,
' மன்னவனே நீ அறியாயோ,
என் மனதை தவிக்கவிட்டு
சென்றுவிட்ட நீ
இன்றுதான் வீடு திரும்பினாய்
நீ இல்லா உலகம் எனக்கு
பகலாய் காய்ந்திட
அதில் பால்நிலா என் முகம்
பகல் நிலவாய் போனதடா , என்றாள்

' பகலும் கழிந்துவிட்டதடி கிளியே.
நானும் உனைத்தேடி வந்துவிட்டேன்
நான் நானாய் உன்னவனாய் மட்டும்.
இனி உனக்கு ஏனடி வாட்டம்,
இரவும் இருளாய் வந்து சூழுதடி,
இனி நீ ஒளிமிகுந்த பால்நிலவாய்
நான் விரும்பும் என் நிலவாய்
என் பெண் நிலவாய்
எனக்குமட்டும் வந்து காய்ந்திடுவாய்
கண்ணே ', என்றேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Sep-17, 2:04 pm)
Tanglish : pennum nilavum
பார்வை : 94

மேலே