இலையுதிர்காலத்தை இதயத்தில்

உன் வருகையில்
உன் பார்வையில்
உன் புன்னகையில்
உன் தீண்டலில்
உன் காதலில்

வசந்த காலத்தை போல் என்னுள் இருந்து
என் வாழ்வை நகர்த்திகொண்டுபோனாய் !

வருகையும் இல்லை
பார்வையும் இல்லை
புன்னகையும் இல்லை
தீண்டலும் இல்லை
நீயும் இல்லை !

"காதலை "மட்டும் விட்டுவிட்டு
இலையுதிர்காலத்தை இதயத்தில்
இருத்திவிட்டு போய் விட்டாய் !

எழுதியவர் : முபா (13-Sep-17, 2:27 pm)
பார்வை : 246

மேலே