படி இறங்கி வரும் பால்வண்ண நிலவு

மாலைக்கதிர்
மறைய
மறைய !

உன்முகம் தரிசிக்க என் காத்திருப்பின் நேரங்கள்
கடக்க !
கடக்க !

மெல்லமாய் வானமது
இருளினை போர்த்திக்கொள்ள
துவங்க !
துவங்க !

படி இறங்கி வரும் பால்வண்ண "நிலவு "
உன் வருகை
தொடங்க !
தொடங்க !

வாசல்படி தாண்டி வரும் உன் வருகையை
ரசிப்பதா !
வானம் பார்த்து அண்ணாந்து அந்த நிலவை
ரசிப்பதா !

எழுதியவர் : முபா (13-Sep-17, 2:35 pm)
பார்வை : 424

மேலே