காதல் கொண்ட நான்

நீ வாசிக்காத கவிதைகளைத் தெரிந்தும்
தினமும் எழுதிக் கொண்டிருக்கிறது
காதல் கொண்ட என் விரல்கள்

நீ சுவாசித்தக் காற்றை மட்டும்
தினமும் அண்டத்தில் தேடிக் கொண்டிருக்கிறது
காதல் கொண்ட என் நாசிக் துளைகள்

நீ பார்க்கும் ஓரவிழிப் பார்வைகளை மட்டும்
தினமும் மாத்திரைகளாய் விழுங்கி வாழ்கிறது
இளமை தந்த என் காதல் நோய்

நீ விட்டுச்சென்ற புன்னகையை மட்டும்
தினமும் பொக்கிஷமாய் பத்திரப்படுத்திகிறது
காதல் கொண்ட என் மனசின் ஆழங்கள்

நீ போகும் பாதையை மட்டும்
தினமும் பின்தொடர நினைக்கிறது
காதல் கொண்ட என் பாதங்கள்

நீ வீசிப்போகும் வாசனையை மட்டும்
தினமும் சுவாசமாய் உள்ளிழுத்துக்கொள்கிறது
காதல் கொண்ட என் இளமையின் மோகங்கள்

நீ அருகில் வருகையில் சிலிர்க்கும் உணர்வை மட்டும்
தினமும் இதமாய் உறிஞ்சிக்கொள்கிறது
காதல் கொண்ட என் இளமையின் தாகங்கள்

நீ பார்க்கும் ஒற்றை பார்வையை மட்டும்
தினமும் உட்கொண்டு வாழத் தொடங்குகிறது
காதல் கொண்ட என் ஆசைகள்

நீ காதலோடு என் தோள் சாய்வதை மட்டும்
தினமும் காட்சியாக்கி கலைந்து போகிறது
காதல் கொண்ட என் வானவில் கனவுகள்

நீ என்னைக் கடந்து செல்லும் ஒரு நொடியை மட்டும்
தினமும் புகைப்படமாக்கி முகப்புப்படம் ஆக்கிக்கொள்கிறது
காதல் கொண்ட என் இதயத் முகநூல் பக்கம்

நீ நீ கொள்ளும் உன் சிறு அசைவுகளை மட்டும்
தினமும் குறுஞ்செய்தியாக பெற்றுப் பரப்பிக்கொள்கிறது
காதல் கொண்ட என் இதய வாட்ஸாப்ப் மெசேஜ்

நீ காட்டும் ஒவ்வொரு மாய விழி அசைவுகளை மட்டும்
தினமும் உன்னிப்பாய் கவனித்துப் பரபரப்புக்கொள்கிறது
காதல் கொண்ட என் இதயத்துடிப்பின் செய்தி அலைவரிசை

நீ எங்கோ தூரமாக சிரிக்கும் சத்தத்தை மட்டும்
தினமும் ரிங்க்டோன் ஆக்கி சிணுங்கத் தொடங்குகிறது
காதல் கொண்ட என் இதய அலை பேசி

நீ எங்கோ தூரமாக தோழிகளோடு பேசும் சத்தத்தை
தினமும் மயங்கி இசையென பதிவு செய்துகொள்கிறது
காதல் கொண்ட என் இரு செவி துளைகள்

நீ என்னோடு பேசிச் செல்லும் ஓரிரு வார்த்தைகளை மட்டும்
தினமும் திரும்பத் திரும்ப அசைபோட்டு உயிர் வாழ்கிறது
காதல் கொண்ட என் உறங்கா நினைவுகள்

நீ நீ நீ
ஓ நான் நான் நான் ..
காதல் கொண்ட நான் ...!


Close (X)

14 (4.7)
  

மேலே