விழிதேடி

நொடி முள்ளும் தேய்கின்றது

எந்தன் மனமோ உன்தான் நிழல் தேடி அலைகின்றது

உன்னைக் காண காத்திருந்த கனங்கள்
கவிதை ஒன்றை யோசித்தேன்

கண்ணதாசன் கண்டிடாத கவிதையா?

வைரமுத்துவுக்கு வளைந்திடாதா வரிகளா?

இசைஞானிக்கு இளகிடாத இறை நிலவா?

உன்தான் பாதங்கள் பட்டவுடன்
பசுமை கொண்டதடி
எந்தன் உலகம்

பருவங்கள் உண்டேனடி
பாவை உன்னைக் கண்டவுடன்

அகதியாக அலைகிறேன்

என் அருகில் நீ அமர்கையில்

கனவு பொழுதாய் கரைகிறது

கண் இமை பிரிவில் தான் தெரிகின்றது.
உன் விழிதேடி என் விழி இன்னும் அலைகிறது....என்று.

எழுதியவர் : சண்முகவேல் (13-Sep-17, 3:00 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 173

மேலே