உனக்காக நான் பாடுறேன் புள்ள

சின்னஞ் சிறு அணுவைப் பிளந்தால் வெளிப்படுகிறது ஆற்றலடி...
என் சின்னஞ் சிறு இதயத்தைப் பிளந்தால் வெளிப்படும் உன் நினைவுகளடி...

எதற்காக என்னைவிட்டு சென்றாயோ?
எதற்காக என் இதயத்தின் இயக்கமானாயோ?
உன்னை மீண்டும் சந்திப்பேனோ?
உன் முகம் காணாமல் சாம்பலாவேனோ?

அடி பெண்ணே!
என்னை கன்னத்தில் அடிப்பாயோ?
என் நெஞ்சில் குத்தி விளையாடுவாயோ?
தூரமாய் நின்று என்னை முறைப்பாயோ?
சத்தமாய் என் பெயர் உரைப்பாயோ?

என் ஏக்கங்களுக்கு அளவில்ல...
உன்னைவிட்டால் எனக்கு யாருமில்ல...
என் மீது உனக்கு இரக்கமில்ல...
உன் திருவாய் திறந்து ஒரு பதில் சொல்லு புள்ள...

வருடங்கள் ஒன்பது ஓடினாலும் உன் மேல் கொண்ட காதல் மட்டும் ஓயவில்ல...
நேற்று நடந்தது போல் கனவிலும் நனவிலும் நீயே பண்ற தொல்ல...
உன்னை மறந்தால் எனக்கு என் வாழ்வே சொந்தமில்ல...
நான் என்றென்றும் உன் அன்புக்காக ஏங்கும் பச்சப்புள்ள...

அடிக்கடி வருகிறாய்...
மேகமாய் கலைகிறாய்...
நிரந்தரமில்லா உலகில் நிரந்தர பந்தமாய் நீயே என்னை ஆள்கிறாய்...
நீ பேசிய வார்த்தைகளை மறக்கவில்ல...
நீ என்னோடு வாழ்ந்தால், வாழ்விலென்றும் நமக்கு தோல்வி இல்ல...
உனக்காகவே நான் பாடுறேன் புள்ள...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Sep-17, 4:24 pm)
பார்வை : 295

மேலே