முகநூல் காதல் உண்மை சம்பவம்

முகநூல் காதலியே
உன்னை நிஜமென நினைக்கலையே
நட்பாகும் காதலை
மெது மெதுவாய் தூண்டினேன்
என் ஆசை சொல்லவும்
உன் ஆசை கேக்கவும்
மனம் ஒத்து போகவே
உன்மேல் காதலாகினேன்
உன்னை காணாமல்
நீ என் அழகை கேக்காமல்
நேரில் பார்க்காமல்
நிஜமாய் நேசிக்க
நினைத்ததால் காதலித்தேன்
உன் சம்மதம் கேட்டுவிட்டேன்
உன் மனதை நான் அறிவேன்
என் மனதை நீ அறிவதுபோல்
சம்மதம் சொல்லிவிட்டாய்
என் மனதை திருடிவிட்டாய்
வருடம் நொடியாக பொழுதை கழித்தேன் சுகமாக
யார் அழுது நின்றாலும்
உன் மனமோ தாங்காது
நிம்மதியாய் தூங்காது
என்று நானறிவேன் நீ தவித்தால் நான் சரிவேன்
முதல் பொய் நானுரைத்தேன்
மனது துடிக்குமென்று
என் வலியை நான் மறைத்தேன்
உனக்கு வலிக்குமென்று
பிரிவின் வலியெல்லாம்
சேர்கையில் தொலையுமென்று
தவறாய் யோசித்தேன் அதுவரை
எங்கு சுவாசித்தேன் என நானறியேன்
எடுத்தேன் மறுபிறப்பு
மீண்டும் காதலிக்க
பேச தொடங்கிவிட்டேன்
முன்போல் என்னிடம் நீ சகஜமாய் பேசாமல்
ஏதோ மழுப்பி நின்றாய்
மெது மெதுவாய் வெறுத்து சென்றாய்
காரணம் தெரியாமல்
சிந்தை கலங்கி நின்றேன்
என்ன விந்தை என நினைத்தேன்
மீண்டும் கைகோர்க்க
உன்னோடு சேர்ந்து நிற்க
மிகவும் கடினமுற்றேன்
என்னை வெறுப்பாயோ
என கனவிலும் நானறியேன்
என் தேடல் தொடங்கியதே
உன்னை கண்டெடுத்தேன்
காரணம் கேட்டு நின்றேன்
என்னை நீ வெறுக்க
என்னை பிடிக்கல என்றாலும்
மனத்தால் தேறி நிற்ப்பேன்
ஏதும் சொல்லாமல்
இன்னும் வலி கொடுத்தாய்
மௌனத்தை தாய்மொழியாய்
விலைக்கு வாங்கி விட்டாய்
காரணம் இல்லாது என்னை வெறுப்பதெல்லாம்
உண்மை நேசமில்லைஎன
முதன் முறையாய் சொல்லுகின்றேன்
உன்னை வெறுக்கின்றேன்
உன் பதில் கேக்காமல்
திரும்பி வந்துவிட்டேன்
உனக்கென நானிருப்பேன்
என்றாவது நீ உணர்வாய்
தவறி செய்த தவறை
அன்றும் நான் வெறுப்பேன்
பிறகெப்படி இடம் கொடுப்பேன்
உன்னை வருந்த செய்வேன்
மனத்தால் திருந்த செய்வேன்
நிஜ காதலை வாழ வைக்க

எழுதியவர் : ருத்ரன் p (13-Sep-17, 7:22 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 108

மேலே