விலங்குகளுக்கிடையே,,,

விலங்குகளுக்கிடையே….
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்

விலங்குகள் உலகத்தில்
பணப் பழக்கம்
வந்து விட்டால்….
பசுக்கள் கன்றுக்குட்டிக்கு
பால் பாக்கெட் வாங்க
பூத்துக்குப் போகும் !

குதிரைகள் எல்லாம்
ஸ்கேட்டிங் வாங்க
ஸ்பென்சர் பிளாசாவுக்கு
விரைந்து ஓடும் !

யானைகள் எல்லாம்
இனிமை கரும்பு வாங்க
மணி ஓசையுடன்
மார்க்கெட் செல்லும் !

மான் கூட்டங்கள்
கண்விழிகள் வாங்க
கண் மருத்துவரிடம்
துள்ளி துள்ளி ஓடும் !

முயல் கூட்டங்கள்
நாட்டுக்குள்
மனிதநேயமுள்ள
இதயம் கிடைக்காமல்
காட்டுக்குள் திரும்பும் !

பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (15-Sep-17, 1:55 pm)
பார்வை : 214

மேலே