நண்பனின் பிரிவு
இதழ்கள் முதல் முதலில்
பிரியும் போதுதான்
வார்த்தைகள் பிறக்கின்றது,
இமைகள் பிரியும் போதுதான்
விழிகளில் காட்சிகள் பிறக்கின்றது,
விதைகள் பிரியும் போதுதான்
அதில்
கொடிகள் பிறக்கின்றது,
இரவுகள் பிரியும் போதுதான்
விடியல்கள் பிறக்கின்றது,
கிளைகளில் இலைகள்
பிரியும் போதுதான்
அதில்
வடுகள் பிறக்கின்றது
இருந்தும்
நண்பன் என்ற பெயரில்
உறவாக ஒருவன்
பிரியும் போது மட்டும்
ஏன்
உணர்வுகள் இறக்கின்றது???