என் மௌனச் சிரிப்பு
என் மௌனச் சிரிப்பு
===================
காதோர கிசு கிசு
உன் கவிதையா
அருகில் வந்த மூச்சு
என் உயிரா
தாமரையில் ஓட்டாத
தலையில் ஒட்டிய அன்பா
இல்லை
கைபிடித்து நடந்த
விரல்நுனியின் தெம்பா
சுடர் ஒளியை
சுருட்டி செல்லும்
நிலவா
இல்லை
சொல்லாமல் எடுத்து சென்ற
இதயக் களவா
புரிந்து புரியாத
ஆழ்மனதாய்
துளைபோட்டு
வெளியேற்றுகிறேன்
என் மௌன சிரிப்பை
-J.K.பாலாஜி-