என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 46

இறுதி போட்டியில் பிரவீன் மீண்டும் விளையாடாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டான். முபாரக் மற்றும் ரியாஸின் அறிவுரையும் அது தான். அவனுக்கு காயம் குணமாகவில்லை. அதற்கு முன்பே விழுப்புரம் அணியோடு விளையாடியது இன்னும் அதிக பிரச்சனைகளை கொடுத்தது.

"டேய் பிரவீன், நீ ரெஸ்ட் எடு டா, அது தான் சரி" என்றான் விஜய்.

"ஆமாம் டா, நீ எதுக்கு செமி ல இறங்கின, நாங்க பாத்துக்க மாட்டோமா" என்றான் ரியாஸ்.

"அதான் நல்லா பாத்தேனே, விஜய் இஞ்சூரி, முபாரக் சிங்கிள் டிஜிட் ரன்." என்றான் பிரவீன்.

"இல்ல டா நாங்க பாத்துக்கறோம், கப்பு நமக்கு தான்" என்றான் முபாரக்.

"சரி டா, நான் ஆடலை, அதான உங்களுக்கு வேணும்" என்றான் பிரவீன்.

"டேய், நீ ஆடணும் னு எங்களுக்கும் ஆசை தான், ஆனா நீ ஆல்ரெடி இன்ஜுர்ட் டா" என்றான் முபாரக்.

"சரி டா, நான் ஒண்ணும் சொல்லலையே, நான் ஆடலை, ஆனா ஜெயிக்கணும், அவ்ளோதான்" என்றான் பிரவீன்.

"அண்ணா, ஏன் பிரவீன் விளையாட முடியாத, அவன் விளையாடறத நான் பாக்கணும் அண்ணா" என்றாள் விஜி.

"இல்ல விஜி, அவன் விளையாட ரெடி தான், ஆனா அவன் இன்ஜுர்ட்" என்றான் விஜய்.

"இல்ல அண்ணா, விளையாடட்டும், கடைசில இறங்கட்டும், அவன் இருந்தா உங்களுக்கும் ஒரு மாரல் சப்போர்ட் இல்ல?" என்றாள் விஜி.

"அக்கா, அவங்களுக்கு தெரியாத, பிரவீன் விளையாடலாமா கூடாதான்னு?" என்றாள் ரம்யா.

"உங்க இஷ்டம் அண்ணா. ஏதோ தோணுச்சு சொன்னேன்" என்றாள் விஜி.

இறுதியாக பிரவீன் ஆடவேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இறுதி போட்டியில் கோவை அணியை எதிர்கொண்டது கடலூர்.....இதே காம்பினேஷன் தான் 1996 வருடம், கடலூரின் முந்தைய அணி பிரசன்னா தலைமையில் ஆடியது. அதில் பிரசன்னா-சந்தானம் ஜோடி கோவை அணியை கதி கலங்க வைத்தது.

அதே அணிகள், இறுதி போட்டியில்....

டாஸை முபாரக் வென்றான்.

பவுலிங்கை தேர்வு செய்தான்.

முதலில் ஆடிய கோவை அணி இருபத்தைந்து ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து நூற்றி தொண்ணூற்றி எட்டு ஓட்டங்களை எடுத்தது.

பின்பு ஆடிய கடலூர், முதலில் விஜய் விக்கெட்டை இழந்தது, சற்று நேரத்திலேயே லெனின், ஹரி, கதிர், வெற்றி,முபாரக்,ரகு பதினைந்து ஓவர்களுக்குள் நடையை கட்டினர். பதினைந்து ஓவர்களில் கடலூர் ஏழு விக்கெட் இழப்புக்கு நூற்றி பத்தொன்பது ரன்கள் எடுத்திருந்தது. ரியாஸ் ஒருவனின் தலையில் தான் அணியின் வெற்றி தோல்வி அடங்கி இருந்தது.

ரியாசுடன் விஜய்யின் தம்பி கார்த்திக். வாழ்வில் முதன்முறை அவனுக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதன்பிறகு ஜோஸ் மற்றும் ரியாஸின் தம்பி ஷாகுல் இருவர் மட்டுமே இருந்தனர்.

இந்த விக்கெட் இழந்துவிட்டால் கோவை வெற்றி சுலபமாகிவிடும்.

"கார்த்திக், நீ அடிக்க வேணாம், மேக்சிமம் நான் அடிக்கறேன், சிங்கிள்ஸ் வராத, வந்தா டபுள்ஸ் மட்டும் வா, நான் சொல்ற இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கரெக்ட்டா பாலோ பண்ணு" என்றான் ரியாஸ்.

"சரி அண்ணா" என்றான் கார்த்திக்.

மெல்ல ஆடி அணியின் ஸ்கொரை உயர்த்தினர் இருவரும்.

இருபத்தி இரண்டு ஓவர்களில் 178 ரன்கள் அடித்தனர் கடலூர் அணியினர்.

மூன்று ஓவர்களில் இருபத்தி ஒரு ரன்கள் வேண்டும். அந்த இருபத்தி மூன்றாவது ஓவரை கோவை அணி கேப்டன் திலிப் வீச, அந்த ஓவரில் ரியாஸ் அடிக்க முடியாமல் நான்கு பந்துகளை வீணாக்கினான்.ஐந்தாவது பந்தை நன்றாக அடித்தபோது அது டாப் எட்ஜ் பட்டு நேராக வானத்தில் எழும்ப சுலபமாக அதை விக்கெட் கீப்பராக இருந்த அந்தோணி பிடித்தான்.

ஆட்டத்தின் போக்கு ஆட்டம் கண்டது.

கார்த்திக்குடன் ஷாகுல் சேர்ந்தான்.

பதிமூன்று பந்துகளில் இருபத்தி ஒரு ரன்கள் வேண்டும். கோவையின் வெற்றி ஏறக்குறைய உறுதி ஆனது. கடலூர் அணி வீரர்கள் அடுத்த ஆண்டின் டோர்னமெண்ட் ஜெயிக்கலாம் என்று பேச தொடங்கினர்.

அந்த ஓவரின் கடைசி பந்தும் ரன்கள் எடுக்காமல் மெய்டன் ஓவர் ஆனது.

இரண்டு ஓவர்களில் 21 ரன்கள்.மிகவும் கடினம். அதுவும் கார்த்திக் ஷாகுல் இருவரும் இதுவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்ததே இல்லை.

இருவருக்கும் தண்ணீர் கொண்டு செல்வதை போல பிரவீன் சென்றான். ஏதோ அறிவுரைகள் கூறி தட்டிக்கொடுத்துவிட்டு வந்தான். அந்த ஓவரில் ஷாகுல் பத்து ரன்கள் அடித்தான்.

கடைசி ஓவரில் பதினோரு ரன்கள். அந்த அணியின் கேப்டன் திலிப் மீண்டும் பந்து போட வந்தான். கார்த்திக் எதிர்கொண்டான்.

முதல் பந்தே சிக்சருக்கு பறந்தது. அனைவருமே ஆச்சரியமடைந்தனர். யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஐந்து பந்துகளை ஐந்து ரன்கள். கேலரியில் இருந்து ஒரு ஒரு ரன்னாக அடி என்று கோஷமிட்டனர் கடலூர் அணியினர்.

அடுத்த பந்தை பைன் லெக் திசையில் பவுண்டரி ஆக்கினான் கார்த்திக். அணியின் எண்ணிக்கை சமமானது.

நான்கு பந்துகளில் ஒரே ரன் அடிக்க வேண்டும். வெற்றி கண்ணுக்கு தெரிந்தது.அடுத்த பந்து நோ பாலாகவும் ஆனது, அதை சிக்சருக்கும் விரட்டினான் கார்த்திக்.

கார்த்திக் ஒரே நாளில் கதாநாயகன் ஆனான்.

கார்த்திக்கிடம் முதன்முறை விஜி காயத்ரி ரம்யா பேசினர். மனம்விட்டு பேசினர்.

அந்த வெற்றியின் பிறகு ஒருநாள் தஞ்சையில் கொண்டாட்டம். பிறகு ஊர் திரும்பினர்.

அடுத்த சில தினங்களில் முபாரக்கின்
திருமணம்....கோலாகலமும் குதூகலமும் அனைவரின் மனதையும் ஆட்கொண்டது.

எழுதியவர் : ஜெயராமன் (19-Sep-17, 9:23 am)
சேர்த்தது : J P
பார்வை : 288

மேலே