காதல்

வித விதமாய் நகைகள்
தங்க நகை, வைர நகை
இன்னும் முத்து ,பவளம் ரத்தினங்கள்
என்று ,கடை கடையாய்
தேடி அலைந்து தேர்ந்தெடுத்து
உன்னை நீ அலங்கரித்து கொள்கிறாய்
நிலைக்கண்ணாடி முன் நின்று
உன் அழகை நீயே பார்த்து மகிழ்கின்றாய்
பின்னர் தயங்கி தயங்கி நாணி
உன்னவன் என்முன் வந்து நிற்கிறாய்
'நான் எப்படி இருக்கின்றேன்'சொல்வாயா
என்று கேட்பதுபோல் ,

இதற்க்கு நான், 'என்னவளே
என் காதல் கனிரசமே
உன் அழகிற்கு என்ன குறை
அந்த நகைகள் உனக்கு
அழகு தந்தனவா இல்லை
உன்னால் அந்த நகைகளுக்கு
மெருகு ஏற்றமா என் சொல்வேன்
ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்வேன்
கேட்பாயா என் தங்கமே, ,
'நகைகள் பல அணிந்து நீ
மின்னினாலும், எனக்கு
மனதிற்கு இதம் தருவது
எப்போதும் நீ உதிர்க்கும்
முத்து புன்னகை ஒன்றுதான்
எப்போதும், அறிந்திடுவாய்
என் அழகிய ரோசாப்பூவே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Sep-17, 11:30 am)
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே