மானுட விடுதலை
ஒவ்வொரு தாய்க்கும் மகவை பெற்றெடுக்கும் அந்த நொடிப் பொழுதுகள்... மரணத்திற்கான முன்னோட்டங்கள். ஆனால் தாயுள்ளத்தின் குறியீடாக வரலாற்றில் விளங்கிடும, அற்புதம் அம்மாள் அவர்களுக்கு, கடந்த 26 ஆண்டுகளின் ஒவ்வொரு நொடியும், மரண வாசலில் ஊசலாடும் தனது மகனை எண்ணியே நடக்கிறது மகப்பேறு அனுபவம். தனது மரணத் தண்டனைக்காகவும் , தனது விடுதலைக்காகவும் பல ஆண்டுகள் காத்திருந்தவர்களைத் தான் உலகம் பார்த்து இருக்கிறது. ஆனால் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறை வாசலில், விடுதலையாகி வரும் மகனை உச்சி முகர்ந்து, கட்டித்தழுவிட காத்திருக்கும் தாயை உலகம் முதன் முறையாகப் பார்க்கிறது. ஒரு தாய்க்குத் தான் ஒரு தாயின் உள்ளம் தெரியும். 'அம்மா' என்று மூச்சுக்கு மூச்சு என்று அழைத்து வரும் இனிய ஆட்சியாளர்களே, இனியொரு விதி செய்து அற்புதம் அம்மாள் அவர்களுக்கு அவரது மகனை நிரந்திர விடுதலை செய்து அர்ப்பணம் செய்யுங்கள். இதைப்பற்றி தமிழ் உள்ள வரை தமிழும் பேசும். தமிழக வரலாறும் பேசும். -
ஈர இதயத்துடன்
-சாமி எழிலன்.
23 09 2017
9080228609