என் கண்மணி

என் கண்மணி..
வயலில் நடனமாடு சிறு நெல் பொன்மணி..
அழகில் அவளுடன் எல்லாம் சிறு கல்மணி...
என் கண்மணி..

உன் கண்ணைக் கண்டால் காட்டாற்று வெள்ளம் அமேசானில் கலக்கும்...

கண்ணசைத்தால் அமேசானையே ஒரு கலக்கு கலக்கும்..

மண்ணை கிண்டி உள்ளே செல்லும் மண்புழுக்களெல்லாம்..

உன் பாதம் தீண்ட மண்ணை விட்டு வெளியே வரும்..

பாதம் தொட...

உன் பாதம் தொட்ட பின் பாறையையும் கிண்டி உள்ளே செல்லும்..

பாதம் தொட நான் எங்கே செல்லேன் கண்மணியே!

ஒரு காலம் தருவானோ அந்த காலன்
நான் மண்புழுவாய் மாறிவிட...

காலம் தந்தால் காலமெல்லாம் காலடியில் கிடப்பேன் கண்மணியே...

காதலிக்க உன் மூளையில் ஒரு மூலையில்
இடம் கொடடி கண்மணியே...

எழுதியவர் : மணிபாலன் (24-Sep-17, 2:10 pm)
Tanglish : en kanmani
பார்வை : 323

மேலே