இரு பிணங்களுக்குக் கல்யாணம் நடக்கிறது

காதல்தாசனும், நானும் ஒரு கல்யாணத்திற்குச் சென்றிருந்தோம் அழையா விருந்தாளிகளாய்...

மண மேடையை நோக்கினோம், இரண்டு உருவங்கள் கழுத்தில் மண மாலையோடு வீற்றிருக்க, வேதியர் ஒருவர் செப்பிக் கொண்டிருந்தார் வாயில் நுழையாத புரியாத வார்த்தைகளை...

மணமக்களின் முகத்தை நோக்கினேன்,
ஒரு சிரிப்பு இல்லை, உற்சாகமில்லை,
மணமக்களுக்கான அறிகுறிகள் இல்லை...

" நண்பா! காதல்தாசா, இந்த மணமக்களைப் பார்த்தாயா? ", என்றேன் சந்தேகமாக...

" ஆம். அங்கு இரண்டு பிணங்களுக்கு கல்யாணம் நடக்கிறது. ", என்றான் காதல்தாசன் சுருக்கமாக...

" ஏய் காதல்தாசா! பிணங்களுக்கு யாராவது கல்யாணம் நடத்துவார்களா? ", என்றேன் ஞானியான காதல்தாசனை எடைபோட்டு பார்க்க...

" ஹாஹா ", என்று சிரித்தவன், " இதோ மணமகளாக வீற்றிருக்கிறாளே இவளுடைய மனதைப் பறித்தவன் அதோ சமையல் செய்கிறான். இதோ மணமகனாக வீற்றிருக்கிறானே இவனுடைய மனதிற்குச் சொந்தக்காரி அதோ அங்கே இருக்கிறாள். ", என்று உண்மையைப் போட்டுடைத்தான் காதல்தாசன்..

" மனம் பறிபோன உடல் பிணம் தானே.
அதிலும் இந்த மனங்களும் கொல்லப்பட்டுவிட்டன.
ஆதலால், இது இரு பிணங்களுக்கு நடக்கும் கல்யாணம். ", என்ற காதல்தாசனின் விளக்கம் சரிதானே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Sep-17, 11:09 pm)
பார்வை : 419

மேலே