வாழ்க்கை

தன்னம்பிக்கையும் ; பணிவும்;
உன்னிடம் இருந்தால் போதும்,
தாழ்வுமனப்பான்மையும்;கர்வமும்;
உன்னை விட்டுப் பறந்துவிடும்!!

வாழ்க்கையில்,
வலிகைகளை
நேசிக்க கற்றுக்கொள் ;
வெற்றியின் வழிகள்,
தானாகப் பிறக்கும் !!!

என்றும் உன் கடமைகளைச்
செய்ய தவறாதே!
அதே நேரத்தில்,
கடமைக்காக மட்டும்
எதையும் செய்யாதே !!!

அழகையும்;அறிவையும் ;
மிஞ்சிய ஆற்றல்,
உண்மையான அன்பு!
முடிந்தவரை உனது அன்பை
மற்றவருக்கு அள்ளிக்கொடு !!!!

நம்
வாழ்க்கையும்;மலரும் ஒன்று!
அழகிய மொட்டாகப் பிறக்கும்;
தென்றாலால் மலரும்;
ஒரு நாள் வாடும்;
திடீரென சாகும்;
மீண்டும் அழகாய் பூக்கும்!!!!
இப்படி,
தொடரும் இன்பமும்;சிறுத்துன்பமும்
தான் வாழ்க்கை!!
இதைப் புரிந்தவர் வாழ்க்கை
மணம் வீசும்!!!
புரியாதவர் வாழ்க்கை
வாடி விடும்!!!!

எழுதியவர் : பானுமதி (25-Sep-17, 9:52 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 764

மேலே