சிறுவர்கள்

உண்மைச் சேய் நீ!


நோய் நொடியின்றி
நூறாண்டு வாழ்ந்திட - நீ
பாய் படுக்கையிலே
படராமல் வாழ்ந்திட - நீ
தாய் தந்தையரை
தாங்கியே காத்திடு - நீ
ஏய் என்றொருசொல்
ஏசாது பார்த்திடு - உண்மை
சேய்நீ என்றே
சொந்தமெலாம் புகழ்ந்திடவே!

எழுதியவர் : (27-Sep-17, 4:56 pm)
பார்வை : 1463

மேலே