காதல் -அந்தாதி

ஆண் மயில் என், ஆடலைக் காணவந்த
அழகு பெண் மயிலே, உந்தன்

உன்னத பெண்மையின் நளினத்தில் என்
வசமிழந்தேன் ஆடுவதை மறந்தேன்

மறந்தேன் நடனம் என்று சொன்னாலும்
அடைந்தேன் உந்தன் எழில் வதன தரிசனமே

தரிசனம் அதை நாடி ஆடவந்த ஆண் மயில் நான்
ஆட்டத்தில் இப்போது ஆணவம் அத்தனையும் அடங்கிடவே ,



ஆர்வமெல்லாம் இப்போது பெண் மயிலே,
இப்போது காதலனாய் உன்னோடு உறவாட

உறவாடலாம் வா என் கோல மயிலே
மதுவேந்தும் மலர்விழியே என் உளம்
கவர்ந்த பெண்மயிலே ., வா வா

வசந்தமாய் காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Sep-17, 11:42 am)
பார்வை : 80

மேலே