மழையின் ஆசை

உன்னைச் சேரும்
ஆசையில்தான் மழை
மண்ணையே சேருகிறது
ஆனால் நீயோ
குடை விரித்து அதை
இடைமறித்து விடுகிறாய்
பாவம் மழை
கொஞ்சம் குடைவிலக்கி
உன் உடை நனையவிடு
மண்ணை நனைத்த மழை
தன்னையும் கொஞ்சம்
நனைத்துக் கொள்ளட்டும்


எழுதியவர் : பெ வீரா (30-Sep-17, 5:56 pm)
சேர்த்தது : பெ வீரா
பார்வை : 117

மேலே