நீ நீதான்
புன்னகைக்கிறேன்
#புண்ணாகிபோன
இதயத்தைமறைத்து..
தோற்றுவிட்டேன்
உன்னை தொலைத்து..
எத்தனையோ சலனங்கள்
இதயத்தை உறுத்தியும்
ஒற்றைத்தும்மல் கூட
எனக்குள் உன்னை வைத்து
அறுத்துவிட்டு போகிறது..ஆம்
நீ இன்னும் கூட என்
நினைவினில்
மரணிக்கவில்லை
நீ நீயாகத்தான் இருக்கிறாய்