சிறுவிண்ணப்பம்
இதழ்கள் துடிக்க..
இமைகள் துளிர்க்க.
கணங்கள் கனக்க..
காதல் தவிக்க..
தாகம் மறக்க..
உலகம் மறந்து
ஒருமுறை உன் முன்பு
நான் துடிக்க வேண்டும்..
இல்லை துடிதுடித்து
செத்துவீழ வேண்டும்..என்
இமை மூடும் வேளையில்
உன் இதயம் கலங்காதென்று
தெரியும் எனக்கு ..என்றாலும்
சிறு
விண்ணப்பம் .
.செத்துவீழும் என்னை பார்த்து சிரித்துவிடாதே...