ஏற்றுக்கொள்வாயா
அன்பே
உன்னை அறிந்து ஒருநாள்
என்னருகே நீ அமர்ந்தாய்!
அன்று முதலே
என்னை அறியாமல்
உன்னிடம் இழக்கத்தொடங்கினேன்
என்னை!!,
ஒருமுறை சிந்தித்தேன்
இது என்னவென்னு
பல முறை
உணரத்தொடங்கினேன்
அது காதலென்று,
முழு உடலாக
நான் இருக்க
முழுவதுமாக என்னுள்
ஜீவனாக நீ வருவாயா? என
வாசல் வந்து
பார்க்கத்தொடங்கினேன்!
வட்ட முகமது
வந்திருக்குமா?! என்று,
பல முறை சந்தித்தோம்
சில முறை சிந்தித்தேன்
இது காதல் என்று! இருந்தும்
நீ சிர்த்துப்போகின்றாய்!!,
உன் இதழ்கள் பிரிந்து
சிரிக்கும் வேளைகளில்
எனக்கும் இன்பம் தான்
இருந்தும் என்ன பயன்?
இங்கு இன்னல் பட்டு தவிப்பது
நான் மட்டும் தானே!,
சில காதல்கள் சுமைகள்
சில காதல்கள் சுகங்கள்
என்று கேட்டேன்
அதனை நானும் நாளும்
சுமந்து வரும்
என் சூழ்நிலைகளை சற்று நீ
நினைத்துப் பார்த்தால்
காதல் என்னும் சூரியன்
நம்மிடம் சுடர் விட்டு எரியும்,
தினம் தினம்
அலைபேசியில்
அழைக்கத்தொடங்கினேன்!
அப்போதும் உன்னை
என்னவென்று அழைப்பது என
தெரியாமல் அலையத்தொடங்கினேன்!!,
முள்மீது மலர்ந்த போதும்
மலருக்கு மணமுண்டு!
கருப்பாக இருந்த போதும்
கண்கள் அறியாமல்
கல்லுக்குள் ஈரமுண்டு!!
இருந்தும்
உள்ளம் அது உன்னை
நேசித்த பின்பும்
காலம் என்ன
தீர்ப்பு சொல்லும் என்று
நினைத்தும்
சொல்லாமலே சென்றுவிடுமோ
என்று நினைத்தும்
அதை சொல்லாமல் மறைத்தேன்!!,
பார்வைகள் பேசும் என்று
பலரிடம் கேட்டதுண்டு
இருந்தும்
அது உன்னை காணும் போது
பேசாமலே போனது!
எங்கு உண்மை உனக்கு
தெரிந்து விட்டால்
உண்மையாகவே நீ
பேசாமல் சென்று விடுவாயா என்று!!,
அமைதியான சில இடங்களில்
அருகே நீ இருப்பாய்
ஆறுதலாக நான் இருப்பேன்
அப்போதும் அங்கும் இங்கும்
மனம் பாயும்!
உன் பார்வைகள்
காதலை காட்டாதா?! என்று,
உன்னை காணாத போது
தவிப்பு
உன்னை காணும் போது
தடுமாற்றம் என
எந்நிலைகள் என்னிடம் மாறும் போது!
ஆடவனாய் பிறந்தும்
அல்லல் படுவதை நினைத்து
என்னை வெறுத்தேன்!!,
காலம் என்னும்
கண்ணா மூச்சி விளையாட்டில்
நான் கண்களை மூடிக்கொண்டு
என் காதலை
உன்னிடம் தேடுகிறேன்!,
கண்களை மூடிக்கொண்டு
தேடும் எனக்குத்தான் காதல்
தெரியவில்லை!
கண்களை திறந்து
அதனை
கவர்ந்து பார்க்கும் உனக்குமா
தெரியவில்லை!!,
தெரிந்தால் வந்து
சொல்லி விடுவாயா?
தெரிந்து விட்டது! நீ
தேடுவது என்னை என்று!!!!,
என்னை கடந்து செல்லும்
காற்றுகளின் காதில்
பல முறை சொல்லி அனுப்பினேன்!
என் காதலை உன் காதோரம்
சேர்த்துவிடு என்று!
ஆனால் அதுவும் கைவிரித்தது!!
கன்னி அவள் என்னை
கண்களால் கடத்தி விட்டாள் என்று!!!,
உன்னிடம் சொல்லிய
வார்த்தைகள் பல
சுகம் கொடுத்தது!
ஆனால்
சொல்லாத வார்த்தை ஒன்று
தினம் தினம்
கொன்று குவித்தது!!
அதனால்
மரணத்தை தாண்டி
வந்து விட்டேன் இன்று
மனம் வேண்டி
மறுக்காமல் என்னை
ஏற்றுக்கொள்வாயா????.
என்னவளே!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!