வேதம் என்பது யாது

வேதம் என்பது இறைவன்
நமக்களித்த வாழ்க்கை நெறி
காலத்தை கடந்த தெய்வ மொழி
அழிவேதும் இல்லாதது -எக்காலத்திற்கும்
ஒவ்வும் மொழி -வேதம் புதிது
என்று கூறுவோர்க்கு ஒன்று புரிதல் வேணும்
வேதத்தில் பழமை, புதுமை என்பவை
ஏதும் இலை வேதம் எப்போதும்
அன்றலர்ந்த என்றும் வாடா
தேவன் தந்த திவ்ய ஒலி
தேவன் மொழி -அதைக்கேட்டு
ஞானிகள் நமக்களித்த
என்றுமாரா ஞான மொழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Oct-17, 10:52 am)
பார்வை : 90

மேலே