மனதோடு மழைக்காலமோ

வானமகளின் வைரச்சலங்கைகள்
அறுந்து விழுந்தனவோ
மண்ணெங்கும் மழைத்துளிகள்;
உன்னைப் பார்க்கையில்
உயிரனுக்கள் மீண்டூம்
பிறந்தனவோ என்
வானெங்கும் விடிவெள்ளிகள்!!

முதன்முதலாய் என்
விழியீர்ப்பு விசைகளில்
நீ விழுந்தபோது
கனவுகளின் தேவதை
சிறகுகள் நீங்கி
சுடிதாரில் நிற்கிறதோ!
என வியந்ததாய்
‌ஞாபகம்.
உன்னால் அறியாத
வெட்ககங்கள் பூசிக்கொண்டு
பூமீக்குச் சென்றது
என்முகம்.

அந்நிமிடம் தொட்டு
அடியேனின்
கடமைகளும்
கனவுகளும்
காலத்தோடு உன்னுள்
அடங்கின.
செல்போனில் உன்
குரல் சினுங்கிட
பொழுதுகள் விடியும்.
உன்னை தூங்க
வைத்த பின்தான்
இரவுகள் அடையும்..
இப்படியாய்
என் நொடிகள்
ஒவ்வொன்றும் உன்னிடம்
அடைபட்டுகொள்கிறது
ஆனந்தமாய்............

ஓர்நாள்
அடைமழை உதவியுடன்
ஒற்றைக் குடையின்கீழ்
உன் கைப்பிடித்து
நடக்கையில்
பச்சை சுடிதாரின்
உபகரணம் கொண்டு
தலை துடைத்தாய்
அவ்வப்போது.
ஆனந்தம்
உன்னோடு எனக்கும்...
குடைப்பிடித்தாலும் தொடாமல்
விடமாட்டேன் என
உன்னை நனைத்த
மழையை நினைத்து
உள்ளம் வெந்தாலும்
இய்ற்கையை வென்றவள்
என்னவள் என்ற
பெருமைகள் எனக்குண்டு.
ஏனெனில் உன்சினுங்கலில்
சிலிர்க்கவே சிந்திய
துளிகள் என்னவளின்
அடிமைகள்;

குடை மடித்துஉன்
கையோடு சேர்க்கையில்தான்
எனக்கு புரிந்தது.
ஆம்,
பார்ப்பதற்கு பசுமை.
ஈரமான நந்தவனமும்
இறுக்கமான சுடிதாரும்.
என ரசிக்கையில்
பொய்க் கோபத்தில்
ஜென்மங்கள் தாண்டி
அழைத்துச் சென்றாய்..

மழையோடு ஒதுங்கி
நின்ற பேருந்தில்
ஓரமாய் இடம் பிடித்தோம்
நனைந்தே இருவரும்.
இப்போது பயணம்.
ஓட்டுனரின் கட்டளைக்குப்
படிந்து பேருந்து
பாய்கையில் உயிரோடு
எனக்கு மரணம்.
கண்ணயர்ந்து உன்
தோளில் சாய்கையில்
மீண்டும் ஜனனம்....

அது ஏனோ
விளங்கவில்லை
மழை வந்தால்
மனதுக்கு பிடித்தவள்
என உன்னை
அடையளம் காட்டி
ஏதேதோ
எழுதுகிறேன்.
எழுதிக்கொண்டே வருகையில்
கற்பணையின் எழுத்துகள்
குறைந்து போனது.
கண்தூக்கிப் பார்த்தால்
கணமழை காணாமல்
போயிருந்தது.
ம்ம்ம்ம்.........
இது தான்
மனதோடு மழைக்காலமோ?

எழுதியவர் : (5-Oct-17, 3:29 pm)
பார்வை : 1323

மேலே