எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

வண்டுவரும் தேன்குடிக்க,
வம்சம் தளைக்குமெனக்
காத்திருந்தது மலர்..

வந்தது வண்டல்ல,
வம்சம் அழிக்கும் மனிதன்-
கொண்டுபோய்விட்டான் மலரை..

நாளையும்
மலரொன்று காத்திருக்கும்-
வண்டுக்காக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Oct-17, 7:29 am)
பார்வை : 615

மேலே