புதுக்கவிதை நாம்

புதுக்கவிதை நாம்!!
👫👫👫👫👫👫👫

கண்ணாடியா மனது!
என்னை பார்த்தால்
உன்னை காட்டுதே...
பார்வையால் என்னை தாக்குதே...
காதல் தீ காட்டுத்தீயாய் வாட்டுதே
மெல்ல கூட்டுதே
உன் மேல் மையல் தீமூட்டுதே

அடக்க முடியா காட்டாறாய்
எந்தன் பார்வை
உன்னை நோக்கி பாயுதே

சாரல் மழையாய் நீயும்
எந்தன் தேகம் தீண்டி போகிறாயே

உந்தன் கோர்வையில்
என்னை நானும் இழந்தேனே
சொல்ல முடியா இடங்களிலெல்லாம்
காதல் நரம்புகள் வழிந்தோடுதே
வெட்கத்தில்
உந்தன் மார்புக்குள் ஒளிகிறேனே...

மழைத்துளியை மயிலிறகாய்
வருடுகிறாய் நெஞ்சில்...
மலர்க்காம்பை உயிராக்கி அணைக்கிறாய் இதழில்...

வெயிலில் நனைகின்ற மழை நீ
மழையில் காய்கின்ற வெயில் நான்
கட்டிபிடித்து ஊடல் புரியும் புதுக்கவிதை நாம்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Oct-17, 4:19 pm)
Tanglish : puthukkavithai naam
பார்வை : 131

மேலே