விவேக்கின் பசுமை கலாம் திட்டத்திற்காக கல்லூரியில் நடைபெற்ற மரம் நடுவிழாவில் எழுதி வாசித்த கவிதை.........
என் எழுத்துக்கள்
ஏறி நிற்கும்
இந்த காகிதத்திற்காய்
மரித்துப்போன
அந்த மரத்திற்கு
கண்ணீர் சிந்திவிட்டு
கவிதை தொடர்கிறேன்......
பசுமை கலாம்
சின்னக்கலைவானரை
எண்ணக்கலைவானராய்
பதிவு செய்த
பரிமாணம்...
மரத்தில் தொட்டில்கட்டி,
குழந்தை கிடத்தி,
கூலிக்கு சென்றுவிடும்
தாய்க்கு பின்னர்
தாலாட்டு பாடுவதெல்லாம்
மரங்களின் பொறுப்பு...
மரம்.........................
உயிர்களை உயிர்விக்கும்
இன்னொரு தாய்..
கர்ப்பப்பைகள் ஏதுமின்றி
இயற்கையை பிரசவிக்கும்
பிரபஞ்ச மூலம்....
வேர்கள் வெளிதெரிய
காய் கனி பூமூன்றும்
ஒரேநேரத்தில் சிரிக்கும்
அந்த மரம்
ஒவ்வொரு குழந்தைக்கும்
முதல் ஓவியம்....
குனிந்து வேரில்
கோடாரியிட்ட அதிர்வில்
தலையில் பூ விழுகிறது
அட
அப்பொழுதும் ஆசீர்வாதம்!!!
கல்லால் அடித்தால்
கதாயுதம் தூக்கி
களம் தேடி
அலைபவன் மனிதன்..
மாறாய்
கனிகளை தந்து
கண்ணீரை மறைப்பது
மரம்.....
மாந்தரை மரமென்று
சொல்வோரே
மாற்றிக்கொள்ளுங்கள்...
மரங்கள் மறித்து போனால்.........
கூடுகள் தொலைத்த
குயில்கள் கோபுரங்களில்
அகதிகளாகும்!!!!!!
நவம்பரிலும்
தட்பவெட்பம்
48ஐ
தொடும்!!!!
மரங்கள் மறித்து போனால்.........
அரசமரத்தடி
பிள்ளையார்களுக்கு
உபய நாமங்களிட்டு
குடைகள் விரியலாம்!!!!
ஆக்சிசன்
அரை கிலோ
அறுபது லட்சங்களில் வாங்கப்பட்டு
மூட்டைகளாய்
முளைத்திருக்கும்
முதுகில்
மனிதன் மூச்சுவிடுவதற்காய்!!!!!
யுகங்கள் பல கடந்து
ஒரு அயல்கிரகத்து
குழந்தையின்
புவியியல் புத்தகத்தில்
"பூமியொரு நெருப்பு பந்து"
வரிகள் வார்க்கபடலாம்!!!!
வேடிக்கையிந்த அவலம்
வேண்டாம் நமக்கு.........
நட்ட செடியின் வேர்கள்
தொப்புள் கொடிகளாய்
பூமி தொட
உலகம் செழிக்கட்டும்....
கலாமின் கனவுகளை
நனவாக்கி
மரபுரட்சிதனை
புழக்கத்தில் விட்டதில்
ஊர்சிதமாகிறது விவேக்
சனங்களின் கலைஞன்...
௦பத்து லட்சம் மனிதர்கள்
பத்து லட்சம் மரங்கள்
பசுமையான தமிழகம்.....
--வாழ்த்துக்களோடு மணிகண்டன்