கூத்து

காட்சிப் பிழை
ஓடும் நதி
உறங்கும் மனிதன்
பாடும் குயில்
வெண்மேகம்
காற்றிலாடும்
வீதியெங்கும்
விழாக்கோலம்
பெளர்ணமி வானத்தில்
நிலவு காயும்
மெளனம் ஆயுதம்
பாஷை கேட்கும்
யாசகம்
மரணக் கயிற்றை
முத்தமிட
மண் மீது பிடி சாபம்
தேகம் வளர்க்கும்
யாகம்
நீல வானத்தில்
பரிதியின் ரதம் பாயும்
காலங்கள்
காயம் ஆற்றும்
நரம்புகள் நாட்டியமாடும்
போதையின் பாதை
குரூரம்
பிறர் கண்ணைப் பார்க்க
கூசும்
வாழ்க்கை எல்லாம்
வெளி வேஷம்.

எழுதியவர் : ப.மதியழகன் (26-Jul-11, 5:13 pm)
சேர்த்தது : ப.மதியழகன்
பார்வை : 398

மேலே