பூக்கள்

பூக்கள்.

அழகின் இலக்கணம்

அன்பின் வெளிப்பாடு

காதலின் காரியதரிசி

கவர்ந்து இழுக்கும் காந்தம்

காய்களுக்கு தாய்

வண்டுகளுக்கு உணவு

தேனின் உறைவிடம்

சுகந்தத்தின் உற்பத்திக்கூடம்

மகரந்தத்தின் சேமிப்பு

சுவாசத்தின் இன்பம்

வாசத்தின் ஆரம்பம்

வசந்தத்தின் வருகை

இயற்கையின் பரிசு

மரம் நமக்களித்த வரம்

வண்ணங்களின் ஜாலம்

பெண்களுக்கு அழகு

ஆண்களுக்கு கிளர்ச்சி

வீசும் காற்றுக்கு புனிதம்

புன்னகைக்க கற்று தரும் தாவர குழந்தை

புத்துணர்ச்சி தரும் வாசனை திரவியம்

மனிதன் பிறக்கும் போது வாழ்த்து

அவன் உயரும் போது உற்சாகம்

இல்லற வாழ்வில் இணையும் போது கெளரவம்

தாம்பத்ய வாழ்வில் இன்பம்

சவத்திற்கு மரியாதை

இறைவனுக்கு அர்ப்பணம்

அழகான பெண்களின் கூந்தலில் சூடப்படுவது பூக்களுக்கு பெருமை...!

அழகான பூக்களை கூந்தலில் சூடுவது பெண்களுக்கு பெருமை ...!

பூக்களை நேசிக்காதோர் பூமியில் உண்டோ ?

பூக்களை பிடிக்காதோர் பிரபஞ்சத்தில் உண்டோ ?

பூக்களின் அழகில் மயங்காத மானிடர் உண்டோ ?

பூக்களை போற்றுவோம்

புதிதாய் பிறப்போம்

இனியவன்
அப்துல் ஹமீது

எழுதியவர் : இனியவன் அப்துல் ஹமீது (9-Oct-17, 5:30 pm)
Tanglish : pookal
பார்வை : 326

மேலே