அன்புக்கு எதிரி

எனக்குப் பிடித்தவர்களெல்லாம்
என்னை
நெருங்குவதில்லை

அவர்களுக்கு என்னை
பிடிக்காதென்றும்
அர்த்தமில்லை

ஆமாம்
அன்புக்கு எதிரி
வெறுப்பில்லை

தன்முனைப்பு !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (10-Oct-17, 6:58 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : anpukku ethiri
பார்வை : 476

மேலே