அனுப்பு கனுப்பு

அனுப்பு, கனுப்பு ரண்டு பேரும் கை கழுவிட்டு வாங்க.
😊😊😊😊😊
என்னங்க பாட்டிம்மா, அனுப்புன்னு சொல்லறீங்க. யாரை அல்லது எதை அனுப்பச் சொல்லறீங்க? அப்பறம் கனுப்புன்னு சொல்லறீங்க. தமிழ்ல கணப்புங்கற சொல்தான் இருக்குது. அந்தச் சொல்லுக்கு 'தீ', 'குளிர் காயும் தீ' போன்ற அர்த்தங்கள் தான் இருக்குது. அனுப்பு, கனுப்புன்னு சொல்லீட்டு ரண்டு பேரும் வாங்கன்னு கூப்படறீங்க. எனக்கு எதுவுமே புரிலீங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
அடியே பூங்கொடி, அனுப்பு, கனுப்பு ரண்டு பேரும் எம் பேரன் பாரி மனைவி பூந்தளிருக்கு முதல் பிரசவத்திலேயே பொறந்த ரட்டைக் கொழந்தைங்க. அனுப்பு எங் கொள்ளுப் பேரன். கனுப்பு எங் கொள்ளுப் பேத்தி.
😊😊😊😊😊
என்னங்க பாட்டிம்மா எல்லாம் புரியாத பேருங்களா இருக்குது?
😊😊😊😊😊
நம்ம பட்டிக்காட்டுலகூட தமிழ்ப் பேரு வச்ச கொழந்தைங்க யாரும் இல்ல. எம் பேரன் பாரி தாச்சுமகாலு இருக்கற ஊரு ஆக்குராவில வேல பாக்கறான். அவன் தமிழ்ப் பேர வைப்பான்னு நாம எதிர்பார்க்க முடியுமா? அனுப்பும் கனுப்பும் இந்திப் பேருங்க. அவ்வளவு தான். எல்லாம் கூட்டத்தில கோயிந்தாப் போடறவங்கதான். யாரக் குறை சொல்லறது?
😊😊😊😊
நீங்க சொல்லறது உண்மை தான் பாட்டிம்மா. தமிழ வளர்க்க நம்ம தமிழக அரசு சம்பளம் வாங்கறவங்களே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கறாங்க. உத்தரபிரதேசத்தில வேலை பாக்கற பாரி அண்ணன் தன் குழந்தைங்களுக்குத் தமிழ்ப் பேர வைக்கணும்னு நாம் எதிர்பார்க்க முடியாதுங்க பாட்டிம்மா.
😊😊😊😊
நீ சொல்லறது நூத்துக்கு நூறு சரிதான்டி பூங்கொடி. உம் பேரத்தானே இந்தில புச்சுப்பலத்தான்னு சொல்லுவாங்க.
😊😊😊😊
புச்சுப்பலத்தா இல்லீங்க பாட்டிம்மா. புஷ்பலதா.
😊😊😊😊
எம் வாயில இந்திப் பேரெல்லாம் நொழையாதடி பூங்கொடி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
◆◆◆◆◆●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●●●
Anup = incomparable, without comparison, best.
Kanup = beloved of Lord Krishna.

எழுதியவர் : மலர் (10-Oct-17, 8:53 pm)
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே