கோழை காதலின் கோரப்பக்கங்கள்

ஆண்கள் என்றாலே ஐந்தடி
பின்வாங்கும் எனக்குள்ளும்
பூத்த ஒரு காதல்
இன்று கானல் நீரில் ஓடம்
செலுத்தும் தருணமிது..

உயிர் போகும் வலியான
பிரச வலியை கடந்து
பெற்ற குழந்தையை அன்னை
முத்தமிடும் தருணத்தில்
அனைத்து வலியும் மறைந்து
போக முன்,
அக்குழந்தை அக்கணமே கண் மூடுமாயின் பிரசவ வலியின்
ஆயிரம் மடங்கை உணரும்
அன்னை மனம் தான் இன்று இக்கோழையின் மனமும்..

அதிகாலை வேளைகள்
தொடர்கின்ற என் தேடல்கள்...
இருட்டு மேகங்கள் அதிலும்
என் யாத்திரைகள்..
இளம் உள்ளம்..
வயதாகிய வலிகள்..
அன்னை காலடி பிடித்தழும்
குழந்தை போல் ஞாபகங்கள்..
அனைத்தையும் செழிப்பூட்டும்
கோடை மழை என் கண்ணீர்..

கரைந்த நிமிடங்கள்..
அதில் உறைந்த உன் நினைவுகள்..
வலி மறக்கடிக்கும் சில வழிகள்..
அதை நகர்த்த மறுக்கும் சில நிமிடங்கள்..
உலக யுத்தமல்ல,
யாரும் அறியா உள யுத்தமிது
உணர்வுகள் எதிர்கட்சியில்
உமையான நான் மட்டும் மறுமுனையில்...!

எழுதியவர் : (10-Oct-17, 9:17 pm)
பார்வை : 124

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே