தமிழன்னாய்

முத்தா யொளிர்கின்ற முத்தமிழ் காப்பவளே - தமிழன்னாய் !
மொத்த மொழிகளிலும் மூத்தவள் நீதானே - தமிழன்னாய் !
நித்தம் துதித்திடுவேன் நின்புகழ் பாடிடுவேன் - தமிழன்னாய் !
சித்தந் தெளிவாக்கிச் சீர்பெறச் செய்திடுவாய் - தமிழன்னாய் !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Oct-17, 2:54 pm)
பார்வை : 143

மேலே