காதல்
பார்த்த முதல் பார்வையிலேயே
அவள்தான் என்னவள் என்று
என் மனதில் நான் முடிவு செய்தேன்
அவள் உதிர்த்த முத்துச்சிரிப்பில்
என்னை அவளும் 'என்னவன்' இவன்தான்
என்று ஏற்றுக்கொண்டாள் என்று தெளிந்தேன்
பின்னர் என்ன , காதலர்களாய் உல்லாசமாய்
' நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்'
வானம்பாடிபோல் ஆடித் திரிந்து வந்தோம்
நாங்கள் செய்த ஒரே தவறு எங்கள் காதலை
எங்கள் பெற்றோர்கள் அறிந்தார் இல்லை
இந்த தவறில் எங்கள் 'விதி' ஒளிந்து இருந்தது
எங்களுக்கு தெரியாது - தெரிந்தது அவள்
தந்தை அவளை தன் தங்கை மகனுக்கு
மணம் முடித்து தருவதாய் வாக்களித்தது' இப்போது; ,
அவள் அத்தை இப்போது இல்லை ஆயின்
அவள் தந்தையின் வாக்கு 'அவள் அத்தை வடிவில்'
எங்கள் காதலை அஸ்தமிக்க வந்த காலனாய் மாறியது;
தந்தையின் நிலைமை அறிந்து அவள் இப்போது
'என்னை விட்டு விலகிப் போனாள், 'தூர, தூர'
நான் அவள் மீது வைத்த உண்மைக் காதலை
மறக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல்
தந்தையின் வாக்கெண்ணும் ப்ரம்மாஸ்திரத்தில் கட்டுண்டு
இதை அறிந்து நான் விதியின் சதியை ஏற்றுக்கொண்டு
எங்கள் உண்மைக் காதலை நிலைத்து வைக்க
இதோ உங்கள் முன்னே நான் , மணம் புரியாது
அந்த காதலையே துணையாக ஏற்று வாழ்கின்றேன்
'விதி' எங்களை அடுத்த ஜென்மத்திலாவது
இணைந்துவிடும் என்று எண்ணி ................எண்ணி........