தீபாவளி
இரவெல்லாம் கோலம் வரைவதை
இதழ் சிரிப்புடன் ரசிக்கும் தந்தை...
வண்ணங்களிட உதவும் தமையன்...
தவறை திருத்தி கோலத்தை அழகாக்கும் அன்னை..
முதலில் யார் குளிப்பதென்று
தூங்குவதுபோல்
பாவனை செய்யும் மற்றவர்கள்
ஆளுக்கொரு வேலையென பிரித்துக்கொடுத்தாலும் அடித்துக்கொண்டு அழுகிற அக்காளும் தம்பிகளும் ....
பலகாரம் செய்கையில் கூட்டணி போட்டு ஆளுக்கொன்றாய் சாப்பிடுதல்..
வெடிக்க தெரியாமல் பட்டாசுக்காக சண்டையிடும் அக்கா...
தெரியாவிட்டாலும் அண்ணனுக்கு பரிந்துபேசும் தம்பி ..
சிறிய நெருப்பு பொறிகள் பட்டுவிட நாள்முழுக்க அதை சொல்லியே அனைத்தையும் சாதிப்பது ...புத்தாடைகள் உடுத்தி தங்களதையே அழகென சண்டைபோட்டு அழுவது ..
சாப்பிடுகையில் பக்கத்து
தம்பி இலையில் கைவைப்பது ...
நம் எடுத்தது ஒரு வடையாக இருப்பினும் இரெண்டென திருப்பி எடுக்கும் தம்பி....
இன்னும் இன்னும் எத்தனை ..
சின்ன சண்டைகளும் .செல்ல கோபங்களும் ...
இத்தனையும் பார்த்து ரசித்து கொண்டு
போய்க்கோப குரலில்
நம்மை திட்டி பின்பு சமாதான படுத்தி தன் அனைத்து வேலைகளையும் அழகாய் முடித்து
அமிர்தமாய் அன்னமிடும் அன்னைகளால் தான்
எல்லா ஆண்டும்
எல்லோருக்கும்
ஆனந்த தீபாவளி ...