யாரடி நீ சுவஸ்ரீ

என்கிட்ட யாருமே பேசமாற்றங்க எனக்கு வாழவே சுத்தமா பிடிக்கல இது சுவஸ்ரீயின் வார்த்தைகள். எல்லோரும் அவளை சுவா என்றுதான் அழைப்பார்கள். சுவா பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி இரண்டம் ஆண்டு படிக்கிறாள். படுசுட்டியான பெண். எல்லோரிடமும் எளிதாக தோழி ஆகிவிடுவாள். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டாள்.

படிப்பு கொஞ்சம் குறைவுதான். இருந்தாலும் அவ பெயர் தெரியாத
ப்ரஃபசர்களே கிடையாது. ஏதாவது ஆக்டிவா செய்து கொண்டே இருப்பா. கொஞ்சந்தான் படிச்சாலும் பெயிலாகமாட்டா. ரொம்ப நேரம் கேண்டீன் பக்கம்தான் இருப்பா. ஏதாவது ஒரு பார்ட்டி அவளே கண்டுபிடுச்சி அடிக்கடி பிள்ளைகளோட கூத்தடிப்பா.

அவளுடைய அப்பா ரிடையர்டு ஆர்மி மேன். வீட்டுல செம ஸ்டிரிக்ட். இவள வீட்ல போய் பார்த்தா அவளா நீன்னு கேட்கத் தோனும். நேரத்துக்கு வீட்டுக்கு போகணும். ஈவினிங் 1 அவர்தான் டிவி பார்க்கணும். அதிலும் ஆர்ப்பனவர் நியூஸ் பார்க்கணும் இப்படி ஏகப்பட்ட கெடுபிடி . எல்லாத்தையும் தாங்கிட்டு ரொம்ப நல்லவன்னு அப்பாகிட்ட பேரெடுப்பா. ஆனா எல்லா ஆக்ட்டிங்.

அப்பா கல்யாணம், அது இதுன்னு வெளியூர் போயிட்டா வீடே ரெண்டாயிடும். வீட்லயே ரகள பண்ணுவா. அம்மா இவள கண்டுக்க மாட்டாங்க . அப்பப்ப இவளுடைய ஆக்ட்டிங் பார்த்து என்ஜாய் பண்ணுவாங்க. நம்ம பொண்ணு ரொம்ப ப்ரீடைப்புண்ணு அவங்களுக்கு நல்லா தெரியும். அப்பாகிட்ட அவங்க பட்ற கஷ்டம் போதாதா. இவ வேற படணுமான்னு நெனச்சி இவள கண்டுங்காம இருப்பாங்க ஏன்னா +2 வரைக்கும் அவ போர்டிங் ஸ்கூல்லதான் படிச்சா. டிரான்ஸ்ஃபர் அடிக்கடி வர்ரதால இவளோட படிப்பு கெடக்கூடாதுனு அம்மா அப்பா ரெண்டு பேரும் எடுத்த முடிவு அவ ஹாஸ்டல்ல படிக்கணும்னு சாதாரண ஹாஸ்டல் கிடையாது. ரொம்ப ஸ்டிரிக்ட்டான சிஸ்டர்ங்க நடத்துற ஹாஸ்டல் அது. ஒருமுறை உள்ளே போனா அடுத்து லீவுக்கு மட்டுந்தான் வீடுக்கு வரமுடியும்னா பார்த்துக்கோங்க. ரெண்டு மாசத்துக்கு ஒருமுறைதான் இவங்க அவளை போய் பாக்க முடியும். வாரத்துக்கு ஒருமுறை சிஸ்டர்ரோட கண்காணிப்புல போன் பேசிக்கலாம். மத்தபடி அவ ஒண்ணும் அங்க செய்ய முடியாது.

வீட்டுக்கு வரும்போது கூட அப்பா அவள சும்மா விட்டுவைக்க மாட்டாரு.
5 .30 மணிக்கெல்லாம் எழுப்பிடுவாரு. அவரு வச்சிருக்குற பிட்னஸ் எகியூப்மென்ட்ஸ் எல்லாம் யூஸ் பண்ண சொல்வாரு. சில நேரத்துல அவளுக்கே கடுப்பாய் அம்மாகிட்ட கோவிச்சுக்குவா. “தயவு செய்து என்ன ஹாஸ்டல்லுக்கே திருப்பி அனுப்பிடுமா. அப்பா பண்ற டார்ச்சர்க்கு அங்கேயே தேவல” ன்னு அம்மாகிட்ட சுவா முறைச்சிக்குவா.

இப்படியா வளர்ந்த சுவஸ்ரீ காலேஜ் போனதும் ஆளே மாறிட்டா. தான் எப்படியெல்லாம் வாழனுன்னு நெனைச்சாலோ அப்படில்லாம் இருக்க ஆரம்பிச்சா. ஹாஸ்டல் வாழ்க்க அவளுக்கு எத சொல்லித்தந்துச்சோ இல்லயோ நல்லா நடிக்க சொல்லித்தந்துச்சு.. யார்கிட்ட எப்படி பேசினா வேல நடக்கும்னு அவருக்கு நல்லா தெரிஞ்சுடுச்சி.

காலேஜ் சேர்ந்த முதல் மாசம். அப்பா பென்ஷன் சம்மந்தமா டெல்லி போயிருந்தாரு. அங்கயே ஒருமாதம் தங்கிட்டாரு. இவளுக்கு இங்கே கையும் ஓடல, காலும் ஓடல. அம்மாவ பாடாப்படுத்துனா. தினசரி ஏதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு லேட்டா வருவா. முதல் மாசமா இருந்ததால அவுளோ கிளாஸ் நடக்கல. ப்ரஃபசர்களும் புதுசு. அதனால அடிக்கடி கட் அடிக்கிறது வழக்கமா போயிடுச்சு.

போதாததுக்கு வீட்ல கேள்வி கேட்க அப்பாவும் இல்ல. டிஸ்கோதே, பார்ட்டி அப்டி இப்படினு சுவா சீக்கிரம் வீட்டுக்கு வந்த நாளே இல்ல. சரி ஹாஸ்டெல்ல வளந்தவளாச்சே. போகட்டும் பார்த்துக்குவோம்னு அம்மாவும் விட்டுட்டாங்க.

நம்ம அம்மா பாடு படு குஷி. நிறைய ப்ரண்ட்ஸ். அம்மாகிட்ட சண்டபோட்டு சண்ட போட்டு காசு வாங்கிட்டு லோவா செலவு பண்றதுக்கு அது இது வாங்கணும்னு அப்பா கிட்ட தைரியமா போன்ல கேட்டு அம்மாகிட்ட காசு வாங்கிக்குவா. அம்மாவுக்கு தான் தெரியும் முக்காவாசி உண்மை கிடையாதுன்னு. இப்படியா காலேஜ் முதல் மாசம் ஓடிடுச்சி. அப்பாவும் பென்ஷன் வேலைல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு. இப்பதான் தெரியப் போவது சுவாவுடைய உண்மையான கலர்னு அம்மா பாத்துகிட்டே இருந்தாங்க.

தன்னுடைய தெறமையெல்லாம் யூஸ் பண்ணி சுவா நல்லா சமாளிச்சிட்டா." ஹாஸ்டல் வாழ்க" ன்னு அப்பா கிட்ட தப்பிக்கும் போதெல்லாம் தனக்குள்ளேயே அவ சொல்லிக்குவா. ஒரு வருஷம் எப்படியோ தன்னோட காலேஜ் வாழ்க்கைய சுவா கடத்திட்டா. மேஜர் சப்ஜெக்ட் எல்லாம் ஓகே ரகத்துல மார்க். 2 செமஸ்டர் கிளியர் ஆக்கியாச்சு. அரியஸ் எதுவும் இல்ல. அப்பாடா .... தப்பிச்சிட்டோம்னு பெருமூச்சி விட்டா சுவா. அப்பாவும் அவளுடைய மார்க் பத்தி அவ்வளவா கண்டுக்கல. பாசானதால அவகிட்ட கடுமையா எதுவும் பேசல. அவருக்கு வேண்டியதெல்லாம் டிஸ்சிபிளின் மட்டும்தான்.


ஸக்கெண்டு இயர் சுவா நெனச்சா மாதிரி அவ்ளோ ஈசியா இல்ல. கெமிஸ்ட்ரி பாடங்கள டீப்பா படிக்கற சப்ஜெக்ட் அதிகம். இதல அல்லைடு வேற படிக்கணும். நல்லா நீச்சல் தெரியாதவற கிணத்துல போட்டு அமுக்கணது மாதிரி அவள காலேஜ் ரொம்ப கஷ்டப்படுத்திச்சி. அசைன்மென்ட், செமினார், பிராக்டிகல்ஸ்னு அவளுக்கு இப்போ நேரமே பத்தலா. முன்னாடி மாதிரி அதிகமா சுத்த முடியல. இது அவளோடய முழுவிருப்பம் கிடையாது. என்ன செய்யறது வேற வழியில்ல பாத்துக்கலாம்னு இருந்துட்டா. இதுக்கு நடுவுல நடந்த இன்டர் காலேஜ் காம்படிஷன்ல சுவாதான் ஆல்ரவுண்டர். எச்.ஓ.டி, அம்மா அப்பா ரெண்டு பேரையும் கூப்பிட்டு அவள ரொம்ப பாரட்டிட்டாரு.

அப்ப புடிச்ச சனிதான் இவ்ளோ கஷ்டமும். அப்பா எல்லா ப்ரஃபசர்கிட்டேயும் நல்லா பேச ஆரம்பிச்சிட்டாரு. தன்னுடைய எக்ஸ்சர்வீஸ் பீத்தல் பத்தி. கொஞ்ச நாளைக்குள்ள அவங்கெல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. என்ன ஸ்டிரிக்ட்டா இருந்தாலும் அப்பா ப்ரண்ட்ஸ்கிட்ட ஜாலியா நடந்துக்குவாரு. சூப்பரா கவனிச்சிக்குவாரு. ஒருமுறை அவர பார்க்க வந்த அடிக்கடி வர ஆரம்பிப்பாங்க. அவ்ளோ சூப்பரான ஹாஸ்பிடபுள் பெர்சன்.

இப்போ அப்பாவே சுவாபத்தி கேட்கிலனாலும் அவங்களே அவளப்பத்தி சும்மா எடுத்துவிடுவாங்க. சுவா வகையா மாட்டிக்கிட்டா. பார்டில்லாம் அம்பேல். ப்ரண்ட்ஸ்களோட வெளியே சுத்துறதும் நின்னுப் போச்சு. படிப்புல அவளும் கொஞ்சம் சீரியஸாவே இறங்கிட்ட. இப்ப அவளோடு ப்ரண்ட்ஸ் அவ டெக்கினிக் யூஸ்பண்ணி என்ஜாய் பண்ண ஆரம்பிச்சாங்க ஆனாலும் சுவாகிட்ட ஏதோ சேன்ஜ் இருக்கிறதா அம்மா கவனிச்சாங்க. சரி போகட்டும்னு விட்டுட்டாங்க.

தினமும் காலைல சுவா தானே சீக்கிரம் எழுந்துக்குறா. டிபன் சாப்பிடக்கூட நேரம் இல்ல. அவளுடைய அக்டிவா பைக் ரோட்ல 'பறக்குது'. சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் வீட்ல ஆஜர். எக்ஸ்ட்ரா டைம் ஸ்டடி. டீவி துப்புற பார்க்குறது இல்ல. லேட் நைட்ல டயகிராம் வரையறது அப்டி இப்டினு அம்மாவாலேயே நம்ப முடியாத அளவுக்கு அவகிட்ட சேன்ஜ்.

அப்பா ரூல்ஸ் போடற வேலைய விட்டே விட்டுட்டாரு. சுவாமேல அவரு எவ்ளோ பிரியமா இருக்காருன்னு அம்மாவுக்கு இப்பதான் புரிஞ்சுது. லேட் நைட்ல அவளுக்கு டீ போட்டு கொடுக்கறது, அவ வண்டிய சர்வீஸ்க்கு விட்டுட்டா தானே காலேஜ் வரைக்கும் பொய் அவளை ட்ரோப் பண்றது, அவளுக்கு பிடிச்சமான வைட் போரெஸ்ட் கேக் பிரீஸிர்ல வைக்கிறதுன்னு அவருடைய அன்புக்கு அளவே இல்லே. இதுல அவ டிரஸ் ஐயன் பண்ற புது வேல வேற.


அப்பாவை பத்தி நினைக்ககூட அவளுக்கு நேரம் இல்ல. ஏன்னா ப்ராஜெக்ட், ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சுவாவுடைய நேரம் போயிட்டே இருந்தது. இப்டி வேகமா போன அவ வாழ்க்கையில ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுச்சு.


ஒருமுறை அவ அவசர அவசரமா காலேஜ்க்கு போயிட்டு இருந்தப்ப எதிர்பாராத விதமா ஒரு தள்ளுவண்டியில மோதி அதுல இருந்த பொருள்லாம் பக்கத்துல இருந்த கால்வாயில விழுந்திடிச்சி. சுவாவுக்கு ஒரே பதட்டம். ஏன்னா பண்றதுன்னே தெரியல. அந்த வண்டிக்காரன் ஒரே கூச்சல் போட்டான். அவகிட்டே வந்து உடனே காசு எனக்கு வைன்னு ஐயாயிரம் ரூபா கேட்டான். அவகிட்ட 200 ரூபா தான் இருந்தது. நான் காலேஜ் போற பொண்ணு, தெரியாம நடந்துடிச்சி அப்டி இப்படின்னு என்னென்னவோ சொல்லி பாத்தா. ஒன்னும் நடக்கல.அவன் கூப்பாடும் நிக்கல.


அந்த பக்கம் போன சைடு பார்ன் யூத் ஒருத்தர் தன்னுடைய கே டீ ம் பைக்க நிறுத்திட்டு வந்து இவளுக்காக பேசினாரு. ரொம்ப சண்டை போட்ட அந்த வண்டிக்காரர் கிட்ட தன்னுடைய ஜீன்ஸ் பாண்ட்ல இருந்து ரெண்டு 500 ரூபா நோட்ட குடுத்து சால்வ் பண்ணி விட்டாரு.
சுவாவ கேவலமா பாத்த கூட்டம் இப்போ கலஞ்சி போய்டிச்சி. சுவாவுக்கு பெரிய கஷ்டம் ஏதோ மறஞ்சி போனது போல ஆயிடிச்சு. அந்த நண்பருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு சுவா விழுந்து கிடந்த பைக்க எடுத்துட்டு காலேஜ் போய்ட்டா.

மத்தியானம் கான்டீன் பக்கம் போன அதே யூத் கான்டீன்ல அவளுக்காக காத்துட்டு இருந்தாரு. ஏதோ தப்பு போல அவளுக்கு தோணிச்சி. ஆனா அவரு அத கண்டுக்காம தன் கையில் இருந்த லஞ்ச் பாக்ஸ்சையும் அவளோட ஐடி கார்டுடையும் குடுத்துட்டு எதுவும் பேசாம போய்ட்டிருந்தாரு. சுவாவுக்கு ரொம்ப வெட்கமா போய்டிச்சி. இவரை பொய் தப்பா நினெச்சிட்டோமேன்னு அவர்கிட்ட ஓடிப்போய் ...சாரி.. தேங்க்ஸ் ன்னு சொல்லிட்டு திரும்பிட்டா. அவரு எதுவும் கண்டுக்காம போயிட்டே இருந்தாரு.


நல்லா போய்ட்டிருந்த இவ வாழ்க்கையில ஒரு ஸ்பீட் பிரேக் போட்டது போல இருந்திச்சி. எங்கேயோ இருந்து வந்த அந்த யூத்தோடஅக்கறையும் கரிசனமும் அவளுக்கு புதுசா இருந்துச்சி.இரண்டு முறை அவளோட மனச அவர் 'டச்' பண்ணிட்டாரு.


இப்பெல்லாம் பைக் அந்த ஆக்சிடென்ட் ஜோன் கிராஸ் பண்ணும்போது சுத்தி முத்தி பாத்துட்டு மெதுவா போறா. கிளாஸ் கவனிக்கும்போது ஏதோ ப்ரம்ம பிடிச்சது போல உக்காந்துட்டு இருக்கா. அவ்ளோவா சாப்பிடறதில. இன்டெரெஸ்ட்குறைஞ்சி போச்சி.கொஞ்சம் மெலிஞ்சும் போய்ட்டா. ஏதோ தனக்குள்ள புதுசா பீல் பண்ணா. அந்த ஆள எப்படியாவது திரும்பவும் பாத்துடனும்னு முடிவு பண்ணி அங்க இங்கேன்னு கண்ணா அலையவிட்டா. பிரெண்ட்ஸ் கிட்ட அவனை பத்தி கேட்டு பாத்தா. யாருக்கும் அவனை பத்தி எதுவும் தெரியல. அவளும் விட்ட பாடில்லை. அடிக்கடி அவனோட நெனப்பு தான்.


நல்லா போய்ட்டிருந்த செகண்ட் இயர் இப்போ கொஞ்சம் இழுபறியா போச்சு. செமெஸ்டர் எக்ஸாம் சரியா பண்ணல. சி. ஏ.ல கிடைச்ச நல்ல மார்க் செமெஸ்டர காப்பாத்துச்சு. இந்த முறையும் எல்லாத்துலயும் பாஸ். ஆனா அவ தொடங்கின வேகத்துக்கு குறைஞ்சது 70 % மார்க் எடுத்திருக்கணும். 55 க்கும் 60 க்கும் நடுவுல மார்க் வந்தது. எப்பவும் போல அப்பா எதுவும் சொல்லல.அம்மா மட்டும் அவகிட்ட நடக்குற மாற்றத்தை கவனிச்சிட்டு தனியா பேசணும்னு நெனச்சாங்க.



சுவா இங்கவாம்மா! உன்கிட்ட பேசணும்னு சொன்னவுடனே அவளுக்கு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ஏனோ தெரியல கண்ணுல இருந்து பொல பொலன்னு கொட்டிடுச்சி. அவ அழுது அம்மா பாத்ததே இல்ல. எம் பொண்ணு ரொம்ப ஸ்டராங்கிண்ணு அம்மா நினைச்சிட்டு இருந்தாங்க.

சுவா இப்பதான் அந்த வார்த்தைய சொன்னா. என்கிட்டே யாருமே பேசமாட்ற்றங்க எனக்கு வாழவே சுத்தமா பிடிக்கலன்னு . அம்மா அவள டிஸ்டர்ப் பண்ணல. பேசட்டும்னு விட்டுட்டாங்க. ஏறக்குறைய ரெண்டு மணிநேரம் சுவா தனக்கு நடக்குறத சொல்லிட்டே இருந்தா. அம்மா அமைதியா கேட்டுட்டு இருந்தாங்க.

அந்தப்பையனப் பத்தி சுவா தைரியமா அம்மா கிட்ட சொன்னது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . கடைசியா அவ சொல்லி... அழுது முடிச்சதுக்கு அப்புறம் அம்மா பேசுனாங்க. அவகிட்ட இருக்குற தவிப்ப அவங்களால புரிஞ்சிக்க முடிஞ்சது. அவகிட்ட மெதுவா சொன்னாங்க.

சுவா ரொம்ப சுட்டிப்பொண்ணு. சின்ன வயசுல இருந்து நீ பலபேரை கஷ்டப்படுத்தி, கிண்டல் பண்ணி தான் பாத்திருக்கேன்னே தவிர நீ மத்தவங்களால கஷ்டப்பட்டத பாத்ததில்ல.

ஜாலியா இருக்கறேன்ற பேர்ல நீ நிறைய பேர கஷ்டப்படுத்தி இருக்குற. நஷ்டப்படுத்தி இருக்குற. பொய் சொல்ல கவலைப்பட்டதே இல்ல. எம் பொண்ணு தானேன்னு நா உன்கிட்ட கடுமைய போசுனதில்ல. நீ சொல்றது பொய்ன்னு தெரிஞ்சாலும் நானும் அத ரசிச்சிருக்கேன். முதல் தடவையா ஒரு வித்தியாசமான கேரக்டர் ஒருத்தர உன் வாழ்க்கையில பாத்துட்டே. அவருடைய நல்லகுணம் உனக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சி. உடனே இத லவ்னு தப்புக்கணக்கு போட்டுடாத. இதுக்கு பேர் அபிமானம். இப்ப அவர தேடி அலையுற வேலைய விட்டுட்டு படிப்புல கவனம் செலுத்து. ஏன்னா இதே அன்பை, கரிசனைய நானும் உங்கப்பாவும் உன்கிட்ட இத்தனை வருசமா காட்டியிருக்கோம். நாங்க பக்கத்துல இருக்குறதால அதோட அரும உனக்கு தெரியல, பரவாயில்ல.

இனிமே உன்னால முடிஞ்ச அளவுக்கு அடுத்தவங்களுக்கு உதவிய இருந்து பாரு. உன்னோட சுட்டித்தனம் யாரைனா காயப்படுச்சுன்னா அதை திரும்ப செய்யாதே. முடிஞ்ச அளவுக்கு உண்மைய பேசு. நீ தேடுற ஆளு சீக்கிரமாவே உன்ன பாக்க வருவாரு கவலைப்படாதே.

சுவா அம்மாவின் மடியில்படுத்தாள். ஆனந்தமும் அமைதியும் தன்னுள் உணர்ந்தாள்.
(நன்றி. தட்டச்சு உதவி : கிரேசி )

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ் (16-Oct-17, 12:06 pm)
பார்வை : 376

மேலே