ஆசைக்கு ஒரு ஆட்டுக்குட்டி
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென் மேற்கு வலிகாமம் பகுதியில் உள்ள அளவெட்டிக் கிராமத்தை. வழுக்கை ஆறு. தழுவிச் செல்கிறது. பல வாய்க்கால்கள் இணைப்பால் தோன்றியதால் அதற்கு வாய்க்கால் என்ற பெயர் மருவி வழுக்கை ஆறு என்று பெயர் வந்தது. ஒருவரும் அந்த ஆற்றில் வழுக்கி விழுந்ததாக கிராம வாசிகள் கேள்விப் பட்டதில்லை. பதினேழு மைல்கள் பயணம் செய்து அராலி அருகே ஏரியில் கலக்கும் ஆறு அது. ஒரு காலத்தில் பழமையில் ஊறிய கிராம . விவாசாயி குடும்பங்கள் அந்த ஆற்றினை நம்பி வாழ்ந்தார்கள்.
ஆற்றுக்கு அருகே உள்ள சுடலை வைரவர் கோவில் கிராமத்து மக்களின் காவல் தெய்வம். ஒவ்வொரு வருடமும் அதற்குப் பொங்கி, ஆடு, சேவல் பலி கொடுத்து படைப்பார்கள், இந்த வழிபாட்டுச் சடங்கை காவு கொடுத்தல் என்பர். இச் சடங்கு பழங்குடி வழிபாடுகளிருந்து இந்து சமயச் சடங்காக மாறியது. .
பலியிடத் தயாராயுள்ள கிடாய் அல்லது சேவல் கழுத்தில் மலர்களாலான மாலை அணிவித்து அதன் மீது மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. அது.. மூன்று முறை அது தலையைக் குலுக்கும் போது அது சம்மதம் தெரிவித்து விட்டதாகக்கருதி அதைப் பலியிடுகின்றனர். பலி கொடுக்கப்பட்ட கிடாய் அல்லது சேவலின் இறைச்சியை உணவாக்கி சுடலை வைரவருக்கு முதலில் படைத்துவிட்டு அதன் பிறகு அந்த அசைவ உணவை உண்ணும் வழக்கதை ஊர்வாசிகள் கடைப்பிடித்து வருகிறார்கள் இது ஆடி மாதம் நடக்கும் சடங்காகும் பொங்கிப் பலி கொடுத்துப் படைக்கத் தவறினால் ஊரில் தோற்று நோய் பரவி பலரின் உயர்களை பலி எடுத்து விடும். என்று மக்கள் நம்பினார்கள்.
*****
துரை என்று அளவெட்டிக் கிராமத்தில் அழைக்கபடும், சின்னத்துரை தனது இருபது பரப்புக் காணியை நம்பி வாழும் விவசாயி. புகையிலையும் ., வாழையும், வெங்காயமும் மரக்கரியும் செம்மண் காணியில் பயிரிட்டு குடும்பம் நடத்தி வந்தான் துரை. காணியில் உள்ள நல்ல தண்ணீர்க் கிணறு அவனின் விவசாயத்துக்கு பெரிதும் உதவியது. சின்னத்துரையின் தகப்பன் செல்லத்துரை விட்டுச் சென்ற முதிசம். அந்த இருபது பரப்புக் காணி
துரையின் மனைவி தங்கம்மா சாத்திரம்; சொல்வதிலும், ஜாதகம் எழுதுவதிலும் கெட்டிக்காரி. ; . அந்தக் கலையைத் தங்கம்மா அவளின் சித்தப்பாவும் ஊரெழு சாஸ்திரியுமான சதாசிவத்திடம் இருந்து கற்றவள். மூட நம்பிக்கையில் ஊறியவள். . பிறந்த குழந்தைக்கு ஜாதகம் போடுவது முதல் கொண்டு. திருமணப் பொருத்தம் காதுகுத்தல்,.ருதுசாந்தி விழா, திருமண நாள் குறித்து கொடுப்பாள்; . . வாழ்க்கையில் நடக்கப்போவது தீர்க்கத்தரிசி போல் சொல்லக் கூடியவள். அரசியல்வாதிகள் அவளை நாடி வந்ததுண்டு. . அளவெட்டி மற்றும் சுற்றுப் புறக் கிராம மக்களின் மதிப்பைப் பெற்றவள். துரை குடும்பத்தில் அவளின் வருமானம் வேறு. இரண்டு வருமானங்களும் மூன்று பிள்ளைகள் உள்ள துரையின் குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தும் பண ஆசை எவரை விட்டது?. துரையின் இருபது பரப்புக் காணிக்குப் பக்கத்துக்கு பதினைந்து பரப்புக் காணி சுடலை வைரவர் கோவிலுக்கு எதிராக இருக்கும் காணி. அதனால் வைரவரின் பார்வையால் அக் காணியில் விளைச்சல் அதிகம் என்று ஊர் பேசிக் கொண்டது. அவரின் மாமனுக்கு அக்காணி சொந்தம். துரைக்கு அவரோடு எல்லைப் பிரச்சனை. அந்தக் காணியையும் வாங்கி தன் காணியோடு சேர்த்து முப்பத்தைந்து பரப்பாக்க துரையின் திட்டம். அந்தக் காணியை தனங்கு விலைக்குத் தரும் படி எவ்வளவோ துறை கேட்டும், மாமன் விற்க சம்மதிக்கவில்லை. அக்காணியை தன் ஒரே மகளுக்கு சீதனமாக கோடுக்க வைத்திருப்பதாக காரணம் சொன்னார் மாமனார்
காணி எல்லை சரியாக அளக்கப் படவில்லை என்று
காணி உரிமைக்கு வழக்கு நடந்தது. இது வரை ஏராளமான பணம் செலவு செய்துவிட்டார் துரை அவருக்கு அது மானப் பிரச்சனை
துரையின் மூத்தவன் சோமு அவனுக்குப் படிப்பு போகவில்லை. எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தகப்பனுக்கு விவசாயத்தில் உதவினான் . இரண்டாவது மகன் சாந்தன். பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்து விட்டு கிராமத்தில் உள்ள சங்கக் கடையில் பலசரக்கு வாடிகையாளர்களுக்கு சாமான்களை பார்சல் செய்து கொண்டிருந்தான் கடைசி பிள்ளை எட்டு வயது ருக்மணி. அவள் .படிப்பில் படு சுட்டி.. வகுப்பில் எப்போதும் முதலாவதாக வந்தாள். அவளது எழாவது பிறந்த நாளுக்கு . துரை அவளுக்கு ஒரு அழகான . ஆட்டுக்கடாய் குட்டி ஒன்றை பரிசாக சுன்னாகச் சந்தையில் வாங்கிக் கொடுத்தார்.. அதைத் துரை வாங்கியதின் நோக்கம் வேறு. அந்த ஆட்டுக் குட்டிக்கு . கழுத்தில் இரு மணிகள் தொங்கின.. ருக்குவுக்கு அந்த ஆட்;டு குட்டியை வெகுவாகப் பிடித்துக் கொண்டது, அக்குட்’டிக்கு மணி என்று பெயர் வைத்து கூப்பிடத் தொடங்கினாள் ருக்கு. அதை குளிபாட்டுவதும், இலை குழை போடுவதும், கட்டித் தழுவி அடிக்கடி முத்தம் கொடுபதும் ருக்கு தினமும் தவறாது செய்வாள். அவள் ஸ்கூலால் வரும் வரை மணி சாப்பிடாது வாசலில் காத்திருக்கும் மாலையில் வயல் வெளியில் மணியோடு ஓடி பிடித்து விளையடுவது ருக்குவுக்கு பிடித்மான செயல். மணிக்கு ருக்கு தமிழில் பேசுவது விளங்கும். மணி. இரு. மணி. படு.., எழும்பு., தண்ணி குடி . இலை சாப்பிடு என்றால் அது புரிந்து செயல்படும. மணிக்கு பசிகுதா என்று ருக்கு கேட்;டால் .ஆம் . இல்லை என்று தலையை ஆட்டி'க் காட்டும்.. ஸ்கூலால் ருக்கு வரத் தாமதித்தால் மணி நிலை கொள்ளாது ம்மா என்று சத்தம் போட்டப் படி அங்கும் இங்கும் அவளைத்; தேடித் திரியும். ருக்கு ஒருவளுக்கே அது கீழ் படியும். குடும்பத்தில் மற்றவர்கள் சொன்னால் முகத்தைத் திருப்பிக் கொன்டு போய் விடும். தோட்டத்துக்கு வரும் அணில் . முயல். பறவைகளைக் கண்டால் மணிக்கு பிடிக்காது.. சத்தம் போட்டு ஆரவாரப் படும். எங்கே அவை தன் ருக்குவின் அன்பைப் பெற்று விடுமோ என்ற பயம் மணிக்கு.
இரவில் ருக்கு படுக்கும் பொது மணிக்கு அவள் அருகே படுத்க வேண்டும். காலையில் ருக்குவின் முகத்தை தன் நாக்கால் நக்கி நித்திரையால் எழுப்புவான் மணி. அந்த இரு ஜீவன்களும் முற் பிறவியில் சகோதரங்களாக இருந்ததோ தெரியாது.. ருக்குவின் சொற்படி அது நடக்கும்.. வேறு யாருடைய சொல்லையும் அது கேட்காது.
" ம்மே ம்மே , ம்மே ம்மே , என்று மணி சத்தம் போட்டால் அது ருக்குவைத தேடுகிறது என்பது அர்த்தம் துரையின் வளவைச் சுற்றி நிறைய பூவரசு , கிளுவ மரக் கதியால்கள். வளவில் இரு கறுதத கொளும்பனும் அமபலவியும் . ஒரு பிலா மரம; . அந்தக் கிளுவ மரத்தில் இருந்து மூத்தவன் மகன் படிக்காததுக்கு கிளுவம், தடியால் துரை பலமுறை அடித்ததும் உண்டு
வளவில் கிளுவம் குழைக்கு, பிலா இலைக்கும் பஞ்சமில்லாமல். பின் வளவு முழுவதும் அருகம் புல்லும்,கோரைப் புல்லும் கொள்ளையா வளர்ந்து கிடந்த காணியில் மணிக்கு மூன்று நேரமும் மணிக்கு உணவுக்குப் பஞ்சம் இல்லை ஆனால் மணிக்கு இலை குழையை ருக்குவின் கையால் வாங்கித் தின்பது போல் அதுக்கு திருப்தி இல்லை.
துரையின் வீட்டு வளவின் ,தென்மேற்கு மூலையில் தங்கம்மா வாஸ்து சாத்திரம் பார்த்து கட்டிய ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில ருக்கு பள்ளிக்கு போனபின் எப்பவும் மணி சோகமன முகத்தோடு படுத்திருப்பான் ,
துரையின் வீட்டுக்கு இரு நூறு யார் தள்ளி. வேம்படி சந்தியில் " ஆட்டுக்கு விடுற ஆறு” என்று அழைக்கபடும் ஆறுமுகம் வீடு இருந்தது. அவனிடம் மூன்று ஆண் ஆடுகள் இருந்தன ஆறுமுகத்துக்கு மனைவியும் ஒரு வைப்பாட்டியும் தான் எல்லாம் . . பிள்ளைகள் இல்லை. “ஆட்டுக்கு விடுகிற ஆறுமகம் " என்றால் அளவெட்டியில் எல்லோருக்கும் தெரியும். சீமைக் கிடாய் வைத்து ஆட்கள் கொண்டு வரும் மறியாடுகளுக்கு கொஞ்ச நேரம் உடலுறவு செய்ய வைப்பதால் அவனை அப்படி சொல்லுவார்கள். ஆறுமுகம் கலியாணத் தரகர் வேலையும் செய்பவன். அளவெட்டியிலும் சுற்று புறக் கிராமங்களிலும் எந்த வீட்டில் திறமான கிடாய் இருக்கிறது ஆறுமுகத்தின் கழுகு கண்களுக்குத் தெரியும்
ஆறுமுகம் சிவலை நிற ஆம்பிளை . கிருதா மீசை. கறுத்த தலை முடி. ,வாட்ட சாட்டமான தோற்றம் உள்ள ஆம்பிளை, சாரத்தை உயர்த்திக் கட்டிக் கொண்டு ,மீசையை எப்பவும் தடவிக்கொண்டு இருப்பான்.
அன்று சனிக்கிழமை துரையும் தங்கம்மாவும் தங்கள் வீட்டில் ஆறுமுகதை எதிர்பார்கவில்லை.
“ என்ன ஆறுமோகம் இந்த பக்கம் . ஏதும் தங்கததிடம் கலியாணப் பொருத்தம் பார்க்க வந்தனியே “ துரை கேட்டான்.
“ எல்லாம் உங்கடை மணிக்கு கலியாணம் பேசி வந்தனான்” என்றன் ஆறுமுகம் சிரித்தபடி .
துரைக்கு ஆறுமுகத்தின் நக்கல் பேச்சு புரிந்து விட்டது . தங்கம்மா உடனே ருக்குவை பார்த்து “ பிள்ளை நீ அறைக்குள் போய் படி. பெரிய ஆக்கள் பேசுவதை நீ கேட்கக் கூடாது”.”: என்றார் துரை. தகப்பனின் சொல்லை ஏற்று பேசாமல் ருக்கு அறைக்குள் போளாள் மணியின் பெயர் அடிபட்டது மட்டும் அவளுக்குக் கேட்டது.
ருக்கு அறைக்குள் போன பின் துரை ஆறுமுகத்தை பார்த்து
“ இங்கை பார் ஆறுமுகம். மணிக்கு இப்போ வயசு இரண்டு. எண்டை மகள் ருக்குவின் செல்லபிள்ளை.அவன் அவனை சுடலை வைரவருக்கு நேர்ந்து வைத்திருக்கிறேன். எண்டை மனுசி என் ஜாதகத்ததை பார்த்து விட்டு சொன்னவள் வைரவருக்கு பலி கொடுத்தால் நான் கேசில் வெண்டு பக்கத்து காணியும் எனக்குச் சொந்தமாகும் என்று, அதுக்கு மணியை சுடலை வைரவருக்கு பலி கொடுக்க நேர்ந்து வைத்திருகிறோம்,. இது என் மகளுக்கு தெரியாது. இப்ப மணி போல் ஒரு உயர் சாதி கிடாயு வாங்க குறைந்தது பத்தாயிரம் வேண்டும். மணியை ஆட்டுக்கு விட முடியாது. அவன் இன்னும் குட்டி. தீட்டோடு மணியை வைரவர் ஏற்க மாட்டார்.” துரை சொன்னார்
“ என்ன துரை, பாவம் மணி சாக முன்பாவது ஒருக்கா சந்தோஷமாய், உறவு வைக்கட்டுமே”
“ விசர் கதை கதையாதே ஆறுமுகம். தெய்வ குற்றம் பொல்லாதது. பிறகு எங்கடை குடும்பத்துக்கு நடக்காதது ஏதும் நடந்து விடும். நீ போய் விதானையார் விசுவலிங்கம் வீட்டில் மூன்று வயதில் நல்ல உயர் சாதி கிடாய் ஓன்று இருக்கு அவரைப் போய் கேட்டுப் பார் காசு கொடுத்தா;ல் அவர் சில வேளை சம்மதிப்பார்”” என்றார் துரை. அறுமுகம் ஒன்றும் பேசாமல் எழும்பிப் போனான்
****
“ஆடி வந்தது, ஆட்டுக்கிடா செத்தது” என்றது போல் ஆடி மாதத்தில் வைரவருக்கு பொங்கல். நூற்றுக் கணக்கான கிடாய்கள், சேவல்கள் பலி ,மேடைக்கு தயாராக இருந்தன ருக்குவை ஊரெழுவில் இருந்த அவளின் சின்னம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் துரையும் தங்ம்மாவும். தனது ஆசை மணிக்கு மரண தண்டனை விதித்தாகி விடடது என்பது ருக்குவுக்குத் தெரியாது. சின்னம்மா வீட்டுக்குப் போக முன் மணியையும் தன் கூடவே கூட்டுச் செல்ல தாயிடம் ருக்கு அனுமதி கேட்டாள்
“ருக்கு உன் சின்னம்மாவுக்கு ஆடு மாடு என்றால் பிடிக்காது. அதனாலை நீ மணியை அங்கை கூட்டிப் போக வேண்டாம். நாங்கள் அவனைக் கவனித்து கொளள்ளுகிறோம். நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. இரண்டு நாளிலை திரும்பி வா ” என்றாள் தங்கம்மா
சின்னம்மா வீட்டுக்கு போகமுன் கிளுவம் குழையும், தான்;குத்தி வந்த பிலா இலைகளையும் மணிக்குக் கொடுத்து அவனை கட்டித தழுவி முகத்தில் முத்தம் கொடுத்து பிரிய மனம் இல்லாமல் பிரிந்தாள் ருக்கு.. மணியும், ம்மே ம்மே என்று பல தடவை கதறியது. அது அக்கா போகதே, என்னை விட்டு போகாதே என்பது போல் ருக்குவுக்கு இருந்தது. .
-****
இரு நாட்களுக்கு பின் ருக்கு வீடு திரும்பினாள் நேரே ஆட்டுக் கொட்டிலுக்கு மணியை தேடிப் போனாள். மணியைக் காணவில்லை. வளவு முளுவதும் சுற்றியபடி மணி மணி உன் ருக்கு அக்கா வந்திட்டேன். எங்கை இருக்கிறாய் வா விளையாட என்று கூவி வளவு முழுவதும் திரிந்தாள் மணியைக் காண முடியவில்லை.
“ எங்கே அம்மா என் மணி. பதட்டத்தோடு ருக்கு தாயைக் கேட்டாள்
“ ருக்கு உன் மணியை வைரவர் கேடு வாங்கி விட்டார். இனி அவன் வைரவர் சாமியின் சொத்து” என்றாள் தங்கம்மா ருக்குவின் குவின் முகத்தைப் பாராமல் அமைதியாக .
“ என்னம்மா சொல்லுறாய்”?
;” நீ சின்னம்மா வீட்டுக்கு போய் இருந்த போது உன் அப்பா வழக்கு வெல்வதற்கு மணியை வைரவருக்கு பலி கொடுத்து விட்டோம். இனி மணி வரமாட்டான்” என்றாள் தங்கம்மா
ருக்கு பதில் சொல்லவில்லை. அவள் கண்கள் இருண்டன அவலுக்கு பேச்சு வரவில்லை நடுக்கத்தொடு மயங்கி கீழே விழுந்தாள். . உடல் எல்லாம் ஒரே வியர்வை. என் மணி ...,என் மணி... என்று அவள் வாய் முணு முணுத்தது.. துரையின் குடும்பம் பயந்துபோய்
“ எடை சோமு உன் தங்கசிக்கு எதோ செய்யுது. உடனே சைககிளிலை போய் நாட்டு வைத்தியர் வைத்திலிங்கத்தாரை அவசிராம் என்று சொல்லி உடனே கூட்டி வாடா” மகனுக்கு துரை மகனுக்கு பதட்டத் கட்டளை இட்டார்
வைத்தியர் வந்து துரையிடம நடந்த விபரம் கேட்டார். ருள்குவின் நாடியைப் பிடித்து பார்த்தாதர். நாக்கை பார்த்தார். அவளை உசிப்பிப் பார்த்தார். கிள்ளிப் பார்த்தார். ருக்கு அசையவில்லை. .
“என்ன வைத்தியர் என் மகள் ருக்குவுக்கு என்ன நடந்திருக்குது”?
துரை கவலையோடு கேட்டார் தங்கம்மா அதிர்ச்சியில் பேசாது நின்றாள்.
நாடி துடிப்பு வெகுவாக் குறைந்து. இருக்கு உடலில் சுரணை இல்லை. பேச்சு இல்லை உடலில் சூடு குறைந்து இருக்கு நான் நினைக்கிறன் உங்கடை மகளுக்கு அவளுடய ஆட்டுக் குட்டிக்கு நடந்ததைக் கேட்ட அதிர்ச்சி அவள் மூளையை பாதித்து விட்டது என்று. . நீங்கள் இந்த பிள்ளை ஆசையாய் வளர்த்த ஆட்டுகுட்டியை வைரவருக்கு பலி கொடுத்திருக்கக் கூடாது உடனே உங்கள் மகளை யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு தாமதிக்காமல் மணியத்தின் காரில் உடனே கொண்டு போங்கள் . அவர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு உங்களுடைய மகள் பிழைப்பாளா இல்லையா என்று முடிவு சொல்லட்டும் என்றார வைத்தியர் வைத்திலிங்கம்..
துரை குடும்பம் வாயடைத்துப் போய் நின்றது.
*****
. (யாவும் கற்பனை)
.