விட்டு விடாதே

விட்டு விடாதே
"அன்பு இல்லம்" என்ற விளம்பர பலகை நோக்கி சென்று கொண்டிருக்கும் மகிழூந்து.வயது முதிர்ந்த இரண்டு உள்ளங்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. அடேய்! என்னது ? ....
வழக்கத்திற்கு மாறாக கார் வேறு வழியில் செல்கிறது என முனுமுனுக்கிறார் தந்தை. அதெல்லாம் ஒன்றும் இல்லை நமது மகன் கோவிலுக்கு அழைத்து செல்கிறான் என்று மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியாக சொல்கிறார் அன்னலட்சுமி.
ஆமாம் ! அம்மா என்கிறான் மகன்.

குடும்பத்தில் நான்கு நபர்கள். மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் என்றால் இந்த குடும்பம் தான் எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது . கதையின் நடிகர்களை அறிமுகம செய்கிறேன் தந்தை பெயர் ஈஸ்வரன்(கோடிஸ்வரன்), தாய் பெயர் அன்னலட்சுமி, மகன் பெயர் பணக்காரன், மருமகள் பெயர் விஜயா. ஒரு வழியாக கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துவிட்டேன்.

கோடீஸ்வரனும், அன்னலட்சுமியும் தனது மகனை நல்ல முறையில் வளர்த்து விட்டனர். அதுமட்டுமல்ல நன்கு படிக்கவைத்தும், நல்ல திருமணமும் முடித்து ஓய்வெடுக்க தயார் நிலையில் உள்ளனர். குடும்பத்தில் எந்தவொரு
சண்டையும் பிரச்சனையும் கிடையாது. அமைதியான ஒரு குடும்பத்திற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.
அப்பா....! அம்மா...! என்று மகிழ்ச்சியுடன் அழைக்கிறான், பணக்காரன். சொல்லு மகனே என்கிறாள் தாய். அம்மா, எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. மாதம் இரண்டு இலட்சம் சம்பளம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அடுத்து நடக்கபோவதரியாமல் குழந்தை சிரிப்பை வெளிப்படுத்தும் பெற்றோர்கள்.
எதற்காக அப்பா வாடகை வீட்டில் இருக்கிறீர்கள். நானும் மனைவியும் வெளிநாட்டிற்கு போன பிறகு உங்களை கவனித்து கொள்ள யாருமில்லை.
அதனால் தான் சொல்கிறான் ஒரு விடுதியில் உங்களை சேர்கிறேன். மாதம் மாதம் எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன் என்ற அழகான கட்டளை விதிக்கிறான் அன்பு மகன்.
சரி என்று ஒப்புக்கொண்டனர் பெற்றோர்கள். வருடங்கள் செல்கிறது. வருடம் ஒருமுறை தந்தையை வந்து பார்க்கிறான் பணக்காரன். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறான். அன்பை மட்டும் அளவாக தருகிறானே என்று உள்ளுக்குள் அழுகிறது தாயுள்ளம்.
கோடீஸ்வரன் சிரிக்கிறான். அன்னலட்சுமி, ஏன் ? இப்படி சிரிக்க என்ன காரணம் என்கிறார்,அது ஒன்றுமில்லை என்னுடைய தாய் தந்தையும் இப்படித்தான் வருத்தப்பட்டு இறந்து போயிருப்பார்கள் என்று அழுகிறான் கோடீஸ்வரன்.
ஆமாம் நான் செய்த தவறு இப்பொழுதுதான் புரிகிறது என்று புலம்புகிறாள் அன்னலட்சுமி.
அன்னலட்சுமி என்கிற பெயர் உனக்கு. ஆனால் என் பெற்றோர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு யோசித்தாய் அல்லவா?
அதன் விளைவுதான் இது?...
என்கிறார், கோடீஸ்வரன்.
அடுத்த வருடம், தாய் தந்தையை பார்க்க ஒரு அழகு தேவதையுடன் வருகிறான், பணக்காரன். பேத்தியை பார்த்தவுடன் எல்லையில்லா சந்தோஷம்.
பிறகு, வருடங்கள் ஓடி கொண்டே போகின்றது.
கோடீஸ்வரனும் அன்னலட்சுமியும் படுத்த படுக்கையாய் மாறிவிட்டனர். பணக்காரன் மற்றும் அவனுடைய மனைவி இருவரும் பார்க்க வந்தனர். மகனே! நீ நல்லா இருக்கிறாயா? என்று கேட்டது தாயுள்ளம்.
நான் கேட்கரனு தப்பா எடுத்துக்காத என்கிறாள் லட்சுமி?
கேளுங்க! அம்மா
ஏன்? எங்களை ஏமாற்றிவிட்டாய்?
ஒன்றும் புரியாமல் தவிக்கறான், பணக்காரன். உன்னிடத்தில் நாங்கள் எதிர்பார்த்தது வசதி, பணமோ இல்லை. உன்தன் பாசம் மட்டும் தான்.
ஏன்? எங்களுக்கு நீ தரவில்லை என்று அழுகிறாள்..
அம்மா! இனி உங்களை விட்டு போகமாட்டேன். வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றாக வாழலாம் என்று சொல்வதற்குள்
இருவரும் அழுதுகொண்டே தனது உயிரை விட்டு விட்டனர்.
"அன்பு இல்லம்" நோக்கி கார் சென்று கொண்டு இருக்கிறது. அழகான தாய், தந்தையை கல்லறையில் உறங்க வைத்தான் பணக்காரன்.
ஒருநாள் பணக்காரனின் மகள் கேட்கிறாள்,
அப்பா ? தாத்தா பாட்டி எங்கே?
நான்தான் உன் பாட்டி தாத்தாவை கொன்று விட்டேன் என்று அழுகிறான்.
கோடீஸ்வரனும் அன்னலட்சுமியும் தனது பெற்றோர்களை புறக்கணித்தனர்.
அதை கண்ட பணக்காரன் தன் தாய் தந்தை செய்த அதே தவறை செய்தான்.
இப்பொழுது தனது மகளும் அதே நிலைமைக்கு பணக்காரனையும் விஜயாவையும் கொண்டு செல்ல இருக்கிறாள்.
குழந்தைகள் கண்ணாடியை போல நாம் செய்யும் செயல்களை திரும்ப செய்யும் குணம் கொண்டவர்கள். குழந்தைகளிடம் அன்பை பரிமாற கற்றுக்கொடுங்கள்.

கோடீஸ்வரன், அன்னலட்சுமி, பணக்காரன் இந்த மூவரும் "அன்பிற்காக" ஏங்கும் பிச்சைக்காரர்களே!

அன்பு என்பது தொலைத்து விடாத பேனா மூடியை போல.. கையில் வைத்துக்கொண்டே....தொலைத்து விட்டேன் என்று எண்ணி எண்ணி அறை முழுவதும் தேடுவதை விட, உங்கள் கையை ஒரு தடவை பாருங்கள், எளிதாக கிடைத்து விடும்.
இந்த உலகில் பசி, ஏழ்மை, துரோகம், சுயநலம் இவற்றை விட "அன்பை" தாய் தந்தையிடம் காட்டாமல் பணத்திடம் காட்டுவதே கொடுமையானது...
இருக்கும் போது தெய்வமாக கருதாமல் போன பிறகு கோவில் கட்டுவதில் எந்தவொரு பயனுமில்லை...
உங்கள் மகன்,
வாகை மணி.

எழுதியவர் : உங்கள் வாகை மணி (17-Oct-17, 8:16 am)
Tanglish : vittu vittathe
பார்வை : 341

மேலே