இருவர் விரும்பினால் தான் காதலா

உறக்கத்தின் வாசலில்
உன் கனவுகளை மட்டும்
வரவேற்க தெரிந்த என் கண்களுக்கு
ஏன் தன் காதலை
சொல்ல முடியவில்லை
உன் கண்களை பார்த்து..

அடித்தாலும் தாயை கட்டியழும்
குழந்தை மாதிரி
உன் புகைபடத்தை பார்த்து
கட்டியழுகிறேன் நான்
குழந்தையாய் நான்
சொல்லமுடியாமல் நான்
விலகமுடடியாமல் நான்

பித்தனும் கூட காதலை
உளறிவிடுவான்
நான் பித்தனும் அல்ல
புத்தனும் அல்ல
உறக்கத்தில் உளறுகிறேன்
பல் இல்லா குழந்தையாய்..

புயல் வீச தெரிந்தும்
மரம் மொளனம் காக்கும்
காதலை பேச தெரிந்தும்
மரமாய் மௌனத்தில் நான்
சொல்ல முடியதா
சூழலில் தவிக்கிறேன்
உன்னை மறக்க
மறுக்கிறேன்

எழுதியவர் : ரத்னகுமார் (எ) குமார் (17-Oct-17, 3:38 pm)
பார்வை : 149

மேலே