எண்ணத்தில் எழுந்தது

***********************

பணம் உள்ளவர்களுக்கு
பண்டிகை உண்டு.
பரம ஏழைகளுக்கு ?

வசதிகள் இருப்பவர்க்கு
விழாக்கள் உண்டு.
வீதியில் வசிப்பவர்க்கு ?

கொண்டாடி மகிழ்வது
தவறில்லை..

விழாக்கள் வருவது
வாழ்க்கையில்
வழக்கம் தானே ...

பக்தியுள்ளோர்க்கு
வாடிக்கையது ...

பகுத்தறிவாளர்க்கு
வேடிக்கையது..

ஆனாலும்வறுமையில்
வாடுவோரை
நினைத்திடுங்கள் !

இல்லார்க்கு கொடுத்து
மகிழுங்கள் !

ஆதரவற்றோர்
அகங்குளிர உதவுங்கள் !

பசியால் வாடுபவர்களுக்கு
அன்னமிடுங்கள் !

முதியோர் இல்லம்
சென்று கொண்டாடுங்கள் !

எளியோரின் ஏக்கங்களை
எரித்திட முற்படுங்கள் !

ஆடையுமின்றி தவிக்கும்
வறியோர் உடுத்திட
ஆடை அளியுங்கள் !

கட்டளையில்லை
கருணை காட்டிடுங்கள் !

ஆணயிடவில்லை
ஆதரவு அளித்திடுங்கள் !

வேண்டுகோளாக
வைக்கிறேன்
வையத்தில் ஒருவனாக !

அன்போடு கேட்கிறேன்
அகிலத்தில் ஒருவனாக !

உள்ளன்போடு கேட்கிறேன்
உங்களில் ஒருவனாக !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Oct-17, 9:08 pm)
Tanglish : ennathil elunthathu
பார்வை : 3445

மேலே