சோலையில் கைகோர்க்க நீயும் வாராயோ

நிலவோடு உன்னுறவு நீலவிழி காதல்
மலர்ப்புன் னகைபோதை தந்திடும் பூங்கிண்ணம்
மாலை தினம்வர வேற்குதே பாராயோ
சோலையில் வாகைகோர்ப் போம்

----இன்னிசை வெண்பா


நிலவோடு உன்னுறவு நீலவிழி காதல்
மலர்ப்புன் னகைபோ தைமது நீலநிலா
மாலை தினம்வர வேற்குதே பாராயோ
சோலையில் கைகோர்க்க நீயும் வாராயோ !

-----நிலை மண்டில ஆசிரியப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-17, 7:00 am)
பார்வை : 99

மேலே