இமைக்க மறந்த அதிக நேர பொழுதுகளை

இமைக்க மறந்த அதிக நேர பொழுதுகளை

உங்களை பார்க்கவேண்டும் என நீ
அனுப்பிய ஒற்றை குறுஞ்செய்திக்கு
பின்னர் !
"இதயம் என்னவோ பம்பரமாய்
மகிழ்ச்சி பரவசத்தில் சுற்ற ஆரம்பித்துவிட்டது "!

முத்தமா !
தழுவலா !
முகம் பார்த்து காதல் சொல்வாளா !

கற்பனை சுழற்காற்று காதலுடன்
உள்ளே ஓட தொடங்கிற்று !

அந்த இருள்கவ்விய நேரம்
நிலவின் வெளிச்சம் வேறு
பிரகாசமாய் !

ஒற்றை மின் குழல்விளக்கு
மினுமினுப்பை தந்த படி ஒளிர்ந்து கொண்டு இருந்தது !

அந்நேரம் தான் சரியாக மேகம் விலக்கி "நிலவும் உன் முகம்
பார்க்க ஆவல் கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை !

எனக்கு பிடித்த அதே வண்ண புத்தம் புதிய புடவை அணிந்து
தரிசனம் தருகிறாய் !

தேவதை வருகை என்னவோ இயல்புதான் !

மின் குழல் விளக்கு மிகை மின்சாரம் பெற்று ஒளிர தொடங்கிற்று !
நில்வு என்னவோ மேகத்தை விட்டு தனித்தே நின்று உன்னை ரசிக்க தொடங்கிற்று !
நட்சத்திரங்கள் பல பூக்களாய் மலர தொடங்கிற்று !
சுகமான தென்றலும் முழுதும் உன்பக்கமே வீச தொடங்கிற்று !

உன் இதழ்களும் வார்த்தை உதிர்க்கவில்லை !
உன் விழிகளும் மௌனமொழி பேசவில்லை !

உன் ஜிமிக்கிகள்தான் என்னிடம் ஜாடை மாடையாய்
தலையாட்டி தலையாட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தது !

முதன் முறையாய் உன்னை சேலை உடுத்தி
ரசித்ததில் அத்தனை மகிழ்வு எனக்கு !

நீ என்னை பார்க்கவேண்டும் என்ற குறுஞ்செய்தியின்
அர்த்தம் என்னவோ !
நீ என்னை வந்து பார்த்து ரசித்துவிட்டு போ என்பதாய் தான்
இருந்தது !

இமைக்க மறந்த அதிக நேர பொழுதுகளை
அவ்வப்போது தந்து விடுகிறாய் !

என் விழிகளுக்கு !

எழுதியவர் : முபா (20-Oct-17, 12:59 pm)
பார்வை : 602

மேலே