டெங்கு நாயகன்

நொங்கு
என்று விற்பதும்
டெங்கு
என்றே கேட்கிறது..,!

நிலவே
உன்னை பார்த்தாலும்
நிலவேம்பு தான்
கசக்கிறது..!

வராத
காய்ச்சலும்
வந்தது போல்
இருக்கிறது..!

நான் ஈ. படத்தில்
ஈ தான்  நாயகன்..!
நாடெங்கிலும் இன்று
கொசுவே
நீ தான் நாயகன்..!

      -  பா. மாறன்

எழுதியவர் : பா. மாறன் (20-Oct-17, 7:16 pm)
Tanglish : dengu naayagan
பார்வை : 1025

மேலே