அடையாளம்

தமிழனுக்கு மதமே கிடையாது.
இந்து உருவாக்கப்பட்டது(எல்லோரையும் இணைத்து திணித்தார்கள் இந்தி போன்றே)
கிருத்துவம் , முசுலீம் தழுவப்பட்டது.
நாங்கள் எல்லோரும் ஓர் இனம்...
தமிழினம்...மனித மாண்பை பின்பற்றுபவர்கள்...இயற்கையை வழிபடுபவர்கள்...
வீரத்தையும் பண்பையும் ஒருங்கே பெற்றவர்கள்...
தமிழர்கள்...

நாம் பிறப்பால் தமிழர்கள்...
நம் இனம் தமிழினம்...
நமக்கு மதம் கிடையாது...

நம் மீது மதச்சாயலையும்...திராவிடச் சாயலையும் பூசி ஆட்சி செய்யப் பார்க்கும் அந்நியர்கள்.

வரலாறு அறிந்து கொண்டு பேசுங்கள்...

எம்மினத்திற்கு மதம் கிடையாது...
எம்மினம் இன்னொரு இனத்தை அழித்து வளராது..
எம்மிது மதத்தை திணித்தீர்.இன்று மொழியை திணிக்கிறீர்.

மனதை தொட்டு கேளுங்கள்
உங்கள் மொழி எங்கே இருந்து பிறந்ததென்று உங்களுக்கே தெரியும்.

தீபாவளியை(தீப ஒளி) தீவாளி என்று சொல்லாதே தமிழா..

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்.
என்ற காரணமே இன்று தெரியாமல் தான் கொண்டாடுகிறோம்.
அவர்கள் சொல்லும் நரகாசூரன் எல்லாம் கிடையாது.
நரகாசூரன் நம் பாட்டன்.
அவர் இறப்பை நாமே கொண்டாடுவோமா?

தீபாவளி என்ற தமிழ் வார்த்தை
இந்தி தீவாளி

இந்தியில் ஒளி என்றால் பிரகாஷ்

பிரகாஷ் என்பது நம்முடைய பிரகாசம்
ஆதார் என்பது நம்முடைய ஆதாரம்
அநாவஷ்யக் என்பது நம்முடைய அநாவசியம்
நம்முடைய (முருகன்( அழகன்- முருகு)) சேயோன் அங்கே கார்த்திகேயா

அழகு என்பதை நிறத்தில் என்று மாற்றி எழுதியவர்கள்...
அழகு என்பது வீரத்தில் (புறத்தில்)பண்பில் (அகத்தில்) இருக்கிறது
..........

கன்னடர்
தெலுங்கர்
மலையாளி
அது தான் உன் அடையாளம்..
அதை நாங்கள் ஒரு காலமும் குலைக்க மாட்டோம் .

தாய் தமிழ் .
தன் சேய்களின் அடையாளங்களை பறிக்க மாட்டாள்.

தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு தானே.
நீங்கள் தண்ணீர் தரவில்லை என்று நாங்கள் கோபப்பட்டாலும்
வெறுப்பை உமிழ மாட்டோம்.

ஒரு தாய் என்பவள்.
தன் பிள்ளையின் வளர்ச்சி கண்டு பூரிப்படைபவள்.
நீங்கள் இந்தியால் உங்கள் அடையாளங்களை இழந்து விடாதீர்கள்...

இந்தியே இந்தியா
ஒரு மொழியை அழித்து வளர்வது வளர்ச்சியல்ல...
ஒரு மொழியில் இருந்து வளர்வதே வளர்ச்சி...

நான் தெலுங்கன் ...
நான் கன்னடன்...
நான் மலையாளி...
என்ற உங்களின் அடையாளங்களை இழந்து விடாதீர்கள்...

பீகாரி, மகாராஷ்டிரி, குஜராத்தி, வங்காளி,அஸ்ஸாமி எல்லாம் இந்தியராகி விட்டார்கள்.

ஒரு இனத்தை அழிக்க
மக்களை அழிக்க வேண்டும் என்று மட்டும் இல்லை.

ஒரு மொழி அழிந்தால்
ஒரு இனமே அழிந்ததென்றும்
உம் அடையாளத்தை இழந்தாய் என்றும் பொருள்..

அடையாளங்களை இழக்காதீர்...

நீ திராவிடன் அல்ல...
ஆரியன் அல்ல...
இந்தியன் அல்ல...
இந்து அல்ல...
முசுலீம் அல்ல...
கிருத்துவன் அல்ல...
நீ தெலுங்கன்...
நீ கன்னடன்...
நீ மலையாளி...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Oct-17, 7:34 am)
Tanglish : adaiyaalam
பார்வை : 659

மேலே