காத்திருப்பில்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்
பண்டிகை வரவை..
காசைக் கரியாக்குவதில்
போட்டா போட்டி,
கரியாகி
பட்டாசு ஆலை விபத்தில்
பலியானவர்களை மறந்துவிட்டோம்..
போனஸ் கிடைக்குமா-
ஏக்கத்தில்
நடுத்தர தொழிலாளர் வர்க்கம்..
தள்ளுபடி விலையில்
தள்ளி விடப்படுபவைகளுக்குத்
தள்ளு முள்ளு..
பிள்ளைகள் வருமா-
ஏக்கத்தில்
முதிர்ந்த பெற்றோர்..
இவர்கள் காத்திருப்பது
தீபாவளிக்கு..
ஏழைச் சிறுவன் இவன்
எண்ணத்தில் தீபாவளி,
மறுநாள்தான்..
காத்திருக்கிறான் இவன்-
கம்பி பொறுக்க...!