வானம் வசப்படும்

இரவும் பகலும்
முத்தமிட்டு பிரியும் அந்தி வேளையில்
வானம் சூரியனை
நாடு கடத்தி கொண்டிருந்தது

பிரிவு துயரத்தை தாளாது
அழுது அழுது
கண்களும் கன்னங்களும்
சிவந்து போன அடையாளங்கள்
திட்டுத்திட்டாய் தெரிந்தன
மேற்க்கு வானத்தில் .

போர் விமானங்களாய்
விரைந்து பாய்ந்தன மேகங்கள் .

இருளின் மடியில்....
அதன் விரலின்
கோரப்பிடியில் ......
அடங்கி ஒடுங்கி கொண்டிருந்தது
பகல்.

ஒற்றை விளக்கும் அணைக்கப்பட்டதில்
மொத்த பூமியும்
இருளில் தத்தளித்தது

நிலா தன் முலைப்பாலை பிளிற்றி
இருளுக்கு
வெள்ளையடிக்க முயன்றது .

நட்சத்திரங்கள்
சூரியனை விட
பல மடங்கு ஆற்றலை
மடியில் புதைத்து வைத்துருந்தாலும்

விருந்தினர் முன்
இரக்க குணமிக்கவளாய்
விளம்பர படுத்திக்கொள்ள
வயதை மாமியாரிடம் சிறிது அன்பு காட்டும்
மருமகளை போல்......

கிரணக்கீற்றுகளை
சிறிது வீசி எரிந்தது
நட்சத்திரங்கள்....


தன் பங்கிற்கு
மின்சாரத்தை தயாரித்து
இருள்கரையை
போக்கும்
முயற்சியில் ஈடுபட்டன
மின்மினி பூச்சிகள்

பூமியும்
ஆடம்பர வர்ண விளக்குகளை
எரிய விட்டு
இருளை போக்குவதாய்
தனக்குத்தானே
சமாதானம் சொல்லிக்கொண்டது

தனக்கெதிராய் விரைந்த
அத்தனை எதிர்ப்பையும்
முறியடித்து
ஆணவ சிரிப்பில்
பூமியை அச்சுறுத்தியது
இருள்.


கடைசியாய்
முட்டி மோதி முடங்கியது
விடிவெள்ளியும்


அதிகாலை நெருங்கியது
நிசப்த பறவை
சப்த கூட்டில் அடங்கும் மெல்லிய வேளையில்...

எங்கிருந்தோ
ஒரு சேவல்
பள்ளியெழுச்சி பாட

திடுக்கிட்டு விழித்த சூரியன்
வாரி வழித்து
மொத்த இருளையும் குடித்துவிட்டு
சொன்னது

முடிவு என்று இருக்குமானால் தொடக்கம்
என்ற ஒன்று இல்லாமல் போகாது
எந்த தொடக்கத்திற்கும்
முற்றுப்புள்ளி உண்டு

இதுதான்
வாழ்க்கை நமக்கு தரும்
உத்திரவாதம் .....

நம்பிக்கை இல்லாதவனுக்கு
அருகில் இருக்கும் பூமியும்
தூரம்தான்

நம்பிக்கை கொண்டு
சிறகு விரித்தால்
நொறுங்கி விழும்
வானம் முதல் பூமிவரையுள்ள
தூரம்தான்

வானம் வசப்படும்

எழுதியவர் : ஆனந்த் நாகராசன் (21-Oct-17, 11:14 am)
Tanglish : vaanam vasapadum
பார்வை : 214

மேலே