கண்ணீர் சுவடுகள்

வாழ்க்கையே இன்றோர்
புத்தகம் ஆனது !
புரட்டி பார்த்தால்
கண்ணீரால் நனைந்த
பக்கங்களே அதிகம் !
நனைந்த பக்கங்களை
உலர வைக்கவும்
வழி இல்லை !
கிழித்து எறியவும்
வழி இல்லை !
கண்ணீர் சுவடுகளோடு
வாழ்க்கை பயணம் !