காதல்

நடையிலே அன்னம்
நடனத்தில் கான மயில்
பாட்டில் குயில்
கொஞ்சும் பேச்சில் கிளி
நடை,நடனம்,பாட்டு,பேச்சு
என்று இந்த ஒவ்வொன்றிற்கும்
ஒரு பறவை என படைத்த இறைவன்
இந்த இத்தனையும் தாங்கி வரும்
பெண்ணுருவைப் படைத்தானோ
என்றுதான் நான் அதிசயிப்பேன்
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்,
என்னவளே நீ ஒரு தனிப்பிறவி என்பேன்.


Close (X)

4 (4)
  

மேலே