தோல்வியே என் காதல்
வராத காதல்
வந்தது உன் மீது
ஏன்... தோல்வியே
வாழ்வென கொண்டிருந்தாய்
இருப்பினும் முயன்றாய்
வாழ்நாளை நிரப்ப...
நிறையாத குடத்தை
அவமானங்கள், அவமரியாதை,
கேலி கிண்டல்கள் கொண்டு
நிரப்பினாய்... எதிர்நீச்சல்
போட்டாய் தினமும் ஒரு
நொடி கூட சோர்ந்து போகாமல்...
உன் தோல்வி மற்றவர்களுக்கு
வேண்டுமானால் படுதோல்வியாக
இருக்கலாம்... ஆனால்
உன் தோல்வி வெற்றிக்கு
அடித்தளம்...
ஒரு தொவிக்கு ஆயிரம் காரணங்கள்
இருக்கலாம்... ஒரு வெற்றிக்கு
ஆயிரம் தோல்விகள்தான்
காரணம் என்பதை குறிக்கோளாக
கொண்டிருக்கும் உன்னை
நான் காதல் கொள்வது பெருமிதம் அடைவேன்...
என் வெற்றி உன்னை கொள்ளை
கொள்வதே என் வெற்றி
திருமகனே...